யாருடைய பிணங்கள் ?..

Posted by அகத்தீ Labels:

யாருடைய பிணங்கள் ?..


யாரங்கே !
அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருப்பது
யாருடைய பிணங்கள் ?”


உங்களுக்கு வேண்டியவர்தான் ;
எதையும் அறியாமலா இங்கு வந்தீர்கள்?”


எனக்கு பார்வை மங்கலாக உள்ளது ;
பிணநாற்றம் மட்டும் முக்கில் நுழைகிறது ;
இருட்டில் யாரெனத் தெரியவில்லை ..
நீங்களாவது சொல்லக்கூடாதா ?”


நாற்றத்தை வைத்து யாரென
யூகிக்கத் தெரியாதா உங்களுக்கு ?’


ஐயா ! அவ்வளவு முகர்வு திறன்
எமக்கு இல்லை ; யாரென நீங்கள்
சொன்னால் பிரச்சனை தீர்ந்துவிடுமே ?”


பிரச்சனை செய்யத்தானே
பிணங்களைக் குவிக்கிறோம் .
அச்சா தீன் வரப்போகிறது !”
!தெரிந்துவிட்டது அடுக்கப்பட்ட பிணங்கள்
சகிப்புத்தன்மை
மதச்சார்பின்மை
மனித உரிமை
ஜனநாயகம்
சமத்துவம் …
அதுமட்டுமல்ல
நீங்களும் யாரென தெரிந்துவிட்டது!”


இந்தக் கிழவனையும் போட்டுத் தள்ளுங்கள்
தூக்கி அடுக்குங்கள்
ஜெய ராம் ! ஜெய் ஹனுமான் !
பாரத் மாத்தா கி ஜே !”


- சுபொஅ


0 comments :

Post a Comment