அவன்
பெயர்..
அவன்
வெறுப்பைப்
பேசுகிறான்
வெறுப்பை
எழுதுகிறான்
வெறுப்பைப்
பயிற்றுவிக்கிறான்
வெறுப்பை
விதைக்கிறான்
வெறுப்பை
உண்கிறான்
வெறுப்பை
குடிக்கிறான்
வெறுப்பை
சுவாசிக்கிறான்
வெறுப்பே
அவன் உடல்
வெறுப்பே
அவன் எலும்பு
வெறுப்பே
அவன் நரம்பு
வெறுப்பே
அவன் ரத்தம்
வெறுப்பே
அவன் உயிர்
அவனுக்கு
கண்ணீர் வராது
தாகம்
தணிக்கவும் இரத்தம்தான்
வெறுப்பும்
அவனும்
வேறுவேறு
அல்ல
வெறுப்பே
அவன்
அவனே
வெறுப்பு
அவளாயிருப்பினும்
அவனின்
நகலாயிருப்பதால்
அவனும்
அவளும் ஒன்றே !
அவனுக்கு
ஆர் எஸ்
எஸ்
தாலிபான்
,ஐஎஸ்ஐஎஸ்.
பாசிசம்
,
நாசிசம்
,
இந்துத்துவம்
ஜியோனிசம்
இஸ்லாமிய
அடிப்படைவாதம்
கிறுத்துவ
வெறி
சாதியம்
,
மதம் ,
இனம்
தூய்மைவாதம்
எத்தனையோ
சொல்லாடல்கள்
ஆனால்
வெறுப்பு
ஒன்றே விதை
ஆம்
வெறுப்பு
ஒன்றே விதை
அவனுக்குப்
பகை
மனிதம்!
மனிதம் !
ஆம்!
அவனுக்குப்
பகை
மனிதம்
! மனிதம் !
0 comments :
Post a Comment