ஈகோ எனப்படுவது

Posted by அகத்தீ Labels:


ஈகோ எனப்படுவது

ஈகோ எனப்படும் தன்னகங்காரம்
தலை நீட்டாத மனிதர்களைத் தேடுகிறேன்

என்னகஙகாரத்தை நான் மறந்து
சாடுகிறேன் பிறரை

உன்னகங்காரத்தை நீ மறந்து
சாடுகிறாய் என்னை

உன்னை காயப்படுத்தியது ஏது ?
என் வெற்றியா ? என் வார்த்தையா?

உன் கோபத்தின் மூலம் ஏது ?
இயலாமையா? தோல்வியா?

உன்னையே கேட்கிறேனே
என்னை அப்படி ஆக்கியது எது?

தனிமையில் யோசிக்க யோசிக்க
வெட்கம் பிடுங்கி தின்கிறது

ஆயினும்

உன்னை அணைக்க
உண்மையை உரைக்க
என்னை தடுப்பது எது ?
அது சரி
ஈகோ என்பது ....


1 comments :

  1. vimalavidya

    Sa.Tamilselvan>>>have you read this poem ?

Post a Comment