முதல் நாள்
மாலை மாலை நேரம் பள்ளி பஸ்ஸில் இருந்து திமுதிமுவென
இறங்கிய குழ்ந்தைகள் இருபதடி தள்ளி நின்றனர் . உச்சுக்கொட்டினர் .சில குழந்தைகள் அழுதன
. என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன். இரண்டு அங்குல நீளம்கூட இராத பிறந்த குட்டு
குருவி ஒன்று இறந்து கிடந்தது. என் பேரனும் பேத்தியும் பாவம் என வருந்தினர். வீடு வந்துவிட்டோம்.
மறுநாள் பள்ளிக்கு
போகும் போது அதே இடத்தில் குழந்தைகள் கூட்டம் . செடிகளில் இருந்து பூக்களைப் பறித்துக்
கொண்டு அவ்விடம் நோக்கி ஓடுகின்றனர் .
ஆர்வத்தோடு
நானும் சென்றேன் . ஒரு செடியோரம் மண்ணைக் குவித்து ஒரு குட்டி சமாதி .அதன் மீது ஒரு
சிறிய அட்டை .அந்த அட்டையில் “ RIP / BABY
BIRD / MAY 19. 2025 . VERGINIA “ கறுப்பு மையால் எழுதி சொருகி இருக்கிறது . குழந்தைகள்
அதன் மீது மலர்களைத் தூவி அஞ்சலி செய்கின்றனர்.
ஒரு நிமிடம்
உறைந்துவிட்டேன் . என் பேரனும் பேத்தியும் மலர் பறித்து வந்து அஞ்சலி செய்தனர் .சிலிர்த்தேன்.
என்னுள் ஒரு
கேள்வி விஸ்வரூபமெடுக்கிறது . ஓர் குட்டி குருவியின் மரணத்துக்கு வருந்தி கண்ணீர் விடும்
குழந்தைகள் மனம் எங்கே ? ஆயிரக் கணக்கான குழந்தைகளுக்கு உணவை எடுத்துச் செல்லவும் வழிவிடாமல்
காஸாவை முற்றுகையிட்டு குழந்தைகளைக் கொல்லும் இஸ்ரேலிய ஜியோனிச யூதவெறி எங்கே ?
சுபொஅ.
22/05/25.
வர்ஜீனியா
.
0 comments :
Post a Comment