அந்த கொடிய
மிருகம்
எந்த நூற்றாண்டைச்
சார்ந்தது ?
நெருப்பை
உமிழும் கண்கள்
இரத்தம் ஒழுகும்
வாய்
விஷத்தைக்
கக்கும் நாக்கு
மனிதத்தைக்
கிழிக்கும் விரல்கள்
வீட்டில்
வளர்ப்பரோ
அந்த கொடிய
மிருகத்தை ?
நாட்டில்
உலவ விடலாமோ
அந்த விஷ
ஜந்தை !
அந்த மிருகம்
வளர்ப்பு பிராணி அல்லவே அல்ல !
காட்டுப்
பிராணியும் அல்ல
நாட்டுப்
பிராணியும் அல்ல
ஈரமில்லா
இதயமும்
மரத்துப்போன
மூளையும்
அழுகிநாறும்
ஆன்மாவும்
மொத்தமாய்
கொண்ட
அந்த கேடுகெட்ட
மிருகத்தை
வாரி அணைத்து
ஊட்டி வளர்க்கும்
எவனும் எவளும்
மனித ஜன்மம் அல்ல !
கண்டால் காறி
உமிழுங்கள்
காலில் கிடப்பதைக்
கழட்டி
விரட்டி அடியுங்கள்
’வெறுப்பு
அரசியல்’ எனும்
விநோத ஜந்துவை
!
அந்த கொடிய
மிருகம்
எந்த நூற்றாண்டைச்
சார்ந்தது ?
“நிறுத்து ! நிறுத்து ! நீ சொல்லும்
’ஜந்து’ எதுவும்
எம் மிருகராசியில் இல்லை !
இனியும் எம்மைக்
கேவலப்படுத்தாதீர் !
மதிகெட்ட
மனிதர் செயலைக் காட்டி !”
சுபொஅ.
08/05/25.
0 comments :
Post a Comment