Showing posts with label குட்டிக்கத. Show all posts
Showing posts with label குட்டிக்கத. Show all posts
Posted by அகத்தீ Labels:

 

குட்டிக் கதை

 

தாத்தா இறந்து விட்டார் . அவர் நினைவஞ்சலி நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவரது போட்டோ சாமி படங்களின் நடுவே கூடத்தில் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது .  ஊதுபத்தியும் மணம் வீசத் தொடங்கிவிட்டது .

 

“ அப்பா ! ஏன்பா ! தாத்தா படத்துக்கு பூமாலை போடுறீங்க !”

 

“ தாத்தா சாமியாயிட்டாரும்மா ! அதுதான் மாலை எல்லாம் போட்டு கும்பிடுறோம்….”

 

“ அப்பா ! அந்த சாமி எல்லாம் கூட செத்துப் போச்சா ? அதுதான் மாலை போடுறோமா ?”

 

அப்பா திருதிருவென விழித்தார் .

 

சுபொஅ.

20/05/25.

குட்டிக் கதை …

Posted by அகத்தீ Labels:

 


குட்டிக் கதை …

 

நேற்று நடை பயிற்சியின் போது , அவர்கள் வழக்கமாகக் கடக்கும் ஒரு கோயிலை நெருங்கிய போது அக்கோயில் பூட்டப்பட்டிருப்பதையும் அங்கு பலர் கூட்டமாக நின்று கொண்டு உரக்க வாதம் செய்வதையும் கண்டனர் . ஏதோ சண்டையில் கோயிலுக்கு இருதரப்பாரும் பூட்டு போட்டுவிட்டதாக் கேள்விப்பட்டனர் .

 

ஒருவர் கோயிலுக்கு போகும் வழக்கமில்லாதவர் . அவருடன் வருபவர் கடவுள் நம்பிக்கையாளர் .அவருக்கு தாய்மொழியாம் மலையாளத்துடன் கன்னடமும் தமிழும் தெரியும் . அன்றைய உரையாடல் கோயிலை சுற்றி வட்டமிட்டது .

 

 “என்ன பிரச்சனை?”

 

 “கோயிலில் பிராமணிய முறையில் பிராமணரே பூஜை செய்ய வேண்டுமா ? பிராமணரல்லாதவர் பூசை செய்ய வேண்டுமா ? இதுதான் சண்டையின் மையப்புள்ளி..”

 

 “அப்படியானால் அங்கு இதுவரை யார் பூஜை செய்தது” .

 

“முதலில் கட்டப்பட்டது அம்மன் கோயில் . வழக்கப்படி அம்மனுக்கு பிராமணல்லாத இன்னொரு சாதியைச் சார்ந்த பூசாரியே பூசை செய்து வந்தார் .பொதுவாக அம்மன் கோயில்களில் அப்படித்தான் இருக்கும் . புது வாகனம் வாங்குவோர் அங்கு வந்து பூசை செய்து பூசனிக்காய் உடைப்பார்கள் .”

 

“ அப்புறம் என்ன ? பிரச்சனை ?”

 

“ அங்கு ஓர் சிவன் சன்னதியும் பின்னர் உருவாக்கப்பட்டது .பிள்ளையார் சன்னதியும்  ,நவக்கிரஹ பீடமும்  பின்னர் வந்தது ..”

 

“ அதில் என்ன பிரச்சனை ?”

 

“ சிவனுக்கும் பிள்ளையாருக்கும் பிராமண பூஜாரி பூஜை செய்வார் . நவக்கிரஹ பீடத்தில்  பக்தர்கள் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்…”

 

“ அப்படியே நடந்தால் என்ன ?”

 

“ பொதுவாக அது அம்மன் கோயில் என்பதால் வரும் பக்தர்கள் அம்மனையே முதலில் கும்பிடுகிறார்கள் . அம்மன் பூசாரிக்கு அதிக தட்சணையும் கிடைக்கிறது .அதன் பின் மற்ற சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டு சென்று விடுகின்றனர் .தட்சணை அதிகம் பிராமண பூஜாரிக்கு கிடைப்பதில்லை ….”

 

“ அங்கே இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்தனர் .அம்மன் பூசாரியிடம் சிவ பூஜை பற்றி கேட்டால் தெரியாது அங்கே போய்க் கேள் என்பதும் ; சிவ பூஜாரியிடம் அம்மன் பற்றி கேட்டால் அங்கே போய்க் கேள் என்பதுமாக முறுக்கிக் கொண்டனர் .

 

அங்கே கோயில் நிர்வாகத்தில் முன்பு பொறுப்பாக இருந்தவர் அண்மையில் இறந்து விட்டார் . நிர்வாகம் மாறி இருக்கிறது . இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் கோயில் வாசலில் உள்ள காலி வீட்டு மனையில் ஆர் எஸ் எஸ் சாகா கூட்டம் நடப்பதை நடை பயிற்சியின் போது கண்டனர் .

 

இனி நடந்ததை வாசகர் யூகத்துக்கு விட்டுவிட்டோம்.

 

ஓர் முன் கதை : அந்த இடம் பஞ்சாயத்தால் சிறுவர் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் .அங்கு அதற்கான ஏற்பாடு தொடங்கப் பட்டபோது பிரச்சனை வெடித்தது .அங்கு குடியிருப்போர் பெரும்பாலும் போலீஸ் இலாகாவைச் சார்ந்தவர்கள் . ஒரு பகுதி கோயிலுக்கு என்றும் ஒரு பகுதி பூங்காவுக்கும் என முடிவானதாகச் சொன்னார்கள் .

 

கோயிலுக்கு பூஜை போடும் போது அந்த மைதானத்தில் நடுவில் பூஜை போட அந்த மைதானம் முழுவதும் மெல்ல மெல்ல கோயில் வசமானது .

 

அந்த சமயத்தில்  அங்குள்ள ஒரு மூத்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சொன்னார் , “ பார்க்ன்னு சொன்னா கண்டவங்க வருவாங்க கவனிப்பார் இல்லேன்னா பாழடைஞ்சு போயிடும் கிரிமினல்கள் கூடும் இடமாகி விடும் அம்மன் கோயில்ன்னா எல்லோருக்கும் நல்ல புத்தி வரும் … அமைதி இருக்கும் … வாழ்வு சுகமாய் இருக்கும் … கோயில் முக்கியம்  …. “

 

இப்போது அங்குள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகளெல்லாம் இரண்டு கி.மீ தள்ளி இன்னொரு நகரில் உள்ள பூங்காவிற்கு சென்று உடற் பயிற்சி செய்கின்றனர் …

 

கோயிலில் புத்தி ரொம்ப வளர்ந்து … ஒழுக்கம் ஓங்கி ….. சிண்டைப் பிடித்துக் கொள்கின்றனர் …..

 

[ இது ஓர் உண்மைக் கதை . ஊர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் [ தன்னிலை முன்னிலை இல்லாமல் ] படர்க்கையில் எழுதப்பட்டுள்ளது …]

 

சுபொஅ.

11/02/25.

 


மதிய நேரம் .அந்த கோவில் வாசலில்

Posted by அகத்தீ Labels:

 

மதிய நேரம் .அந்த கோவில் வாசலில் பள்ளி விட்டு வரும் பேத்திக்காகக் காத்திருந்தேன்.
அந்த வழியாக வேலைக்குச் செல்லும் ஏழு பெண்கள் கோவில் வாசலில் நின்றனர் . பூட்டிய கோவில் கதவின் முன் மிகுந்த மரியாதையுடன் நின்றனர்.
அதில் ஒரு பெண் சர்ச்சுகளில் கும்பிடுவதுபோல் சிலுவைக் குறியிட்டு கும்பிட்டாள் .
இன்னொருத்தி முஸ்லீம் பெண் . செருப்பை கழற்றி ஓரமாக விட்டுவிட்டு அமைதியாக தோழிகளுடன் நின்றிருந்தாள்.
ஜீன்ஸ் போட்ட பெண் ஒருத்தி ஸ்டைலாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியே நின்றாள் .
சுரிதார் போட்ட பெண் கைகுவித்து வணங்கிய படியே வெளியே நின்றாள் .
சேலை கட்டிய இரு பெண்கள் கிட்டே போய் கும்பிட்டுவிட்டு கோவில் சுவற்றில் சாய்ந்து நின்றனர்.
இன்னொரு சேலை கட்டிய பெண் சாமிக்கு எதிரே விழுந்து கும்பிட்டாள்.பின் உட்கார்ந்து தாலியில் குங்குமத்தை பயபக்தியோடு வைத்தாள். இவள்தான் அதிக நேரம் சாமி கும்பிட்டவள்.
எல்லோரும் இவளுக்காக பொறுமையாய் காத்திருந்தனர்.
பூட்டிய கதவுக்கு பின்னாலிருந்த அனுமார் யாரை ஆசிர்வதித்திருப்பார் ? இதில் எவர் ஆகமநெறிப்படி கும்பிட்டவர் ?
பாரத்தை சாமியிடம் இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில் சாலையில் அடியெடுத்து வைத்தனர் ஏழு பேரும் ;
" அந்த சூப்ரவைசர் பார்வையே சரியில்லை. அவன் கண்ணில கொள்ளி வைக்க , கம்பெனியை மூடப் போகிறார்களாமே ? எங்கே வேலை தேடுவது ?எங்கே கடன் வாங்குவது ?" என பேசியபடியே நடந்தனர்.
இவ்வளவுதான் கடவுள் நம்பிக்கை. மதம் அவர்களுக்குள் தடையல்ல. பிரச்சனை எல்லோருக்கும்தான்.
சுபொஅ.
All react

குடிக்கதை -2

Posted by அகத்தீ Labels:

 

 உங்களுக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சனை ?”- ஆன்மீகப் பெரியவர் மெல்லக் கேட்டார் .

 

 “ இல்லாதவரோடு எனக்கு என்ன பிரச்சனை ?” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் .

 

 “ ஊர் உலகமே அவர் இருப்பை ஒப்புக் கொள்ள நீங்கள் மட்டும் நிராகரிப்பது சரியா ?”

 

 “ ஊர் உலகமே பூமி தட்டை என்ற போது ஒருத்தன் மட்டுமே பூமி உருண்டை என்றான் ; இன்று உலகமே பூமி உருண்டை என ஒப்புக்கொண்டுவிட்டதே ..” அவன் உறுதியாகச் சொன்னான்.

 

 “ விஞ்ஞானத்தாலும் விடை காணா முடியா கேள்விகள் நிறைய இருக்கே ?” என கேட்டுவிட்டு வென்றது போல் சிரித்தார் .

 

 “ மெய்தான் . விடை காணாத கேள்விகள் விஞ்ஞானத்திலும் உண்டு . ஆயின் நேற்று தெரியாதவற்றை இன்று தெரிந்து கொண்டது ; இன்று தெரியாததை ஆராய்ந்து கொண்டிருக்கிறது ,நாளை விடை காணக்கூடும் . ஆன்மீகம் விடை தேடும் முயற்சியை கைவிட்டு சரணாகதி அடைய அல்லவா சொல்கிறது … உலகத்தின் வளர்ச்சி தேடலில்தான் ஏற்பட்டது ,இனியும் அப்படித்தான் ;சரணாகதியில் அல்ல”அவன் உறுதியாகச் சொன்னான்.

 

 “ நீ… [கோவத்தில் நீங்கள் நீ ஆனது ] நம்பாவிட்டால் ; கடவுளுக்கு என்ன நட்டம் ? உனக்குத்தான் அவரின் கருணைக் கடாட்சம் கிடைக்காது..”

 

 “ நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை ;யாரிடமும் யாசிக்கவும் இல்லை ; இல்லாதவரிடம் கருணை கடாட்சம் எதிர்பார்ப்பது ஏமாளித்தனம்தானே..”

 

 “ மரணத்தின் விழிம்பில் நிச்சயம் நீ கடவுளை அழைப்பாய் அவர் அப்போது உனக்கு உதவமாட்டார் …?”

 

“ அப்படியே ஆகட்டும்! அன்றாடம் கடவுளிடம் மன்றாடும் பலகோடி மக்களுக்கு கடைக்கண் பார்வையைக்கூட திருப்பாமல் இருக்கிறாரே ஏன் ?”

 

“ உன்னிடம் பேசிப்பேசி தலைவலி வந்துவிட்டது..” என சொல்லியபடியே பையிலிருந்து மாத்திரைகளை எடுத்து விழுங்கி தண்ணீர் குடித்தார் .

 

அவன் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன .

அவரோ விருட்டென்று எழுந்து விடைபெற்றார் .

 

சுபொஅ.

13/3/2023.

குட்டிக்கதை -1

Posted by அகத்தீ Labels:

 ஓர் ஆன்மீக குரு கூட்டத்தைப் பார்த்து கேட்டார் ,"உங்களில் யார் யார் சொர்க்கத்துக்கு போக விரும்புகிறீர்கள்... கையை உயர்த்துங்கள்.‌"


ஒரு சிறுவனைத் தவிர எல்லோரும் கை  உயர்த்தினர்.
  
ஒரு வேளை அந்த சிறுவனுக்கு கேள்வி விளங்காமல் இருக்கலாம் என எண்ணிய ஆனமீக குரு அவனிடம் கேட்டார் ,"உனக்கு சொர்க்கத்துக்குப் போக விருப்பம் தானே !"

சிறுவன் சொன்னான் ," சொர்க்கமோ நரகமோ சாதி மத சனியன் இல்லாத இடம் எதுவோ அதுவே போதும்..."

ஆன்மீக குரு சமாளிக்க எண்ணினார்." இரண்டு இடத்திலும் சாதி மதம் கிடையாது எனறார்..."

" அப்புறம் என்ன எழவுக்கு பூமியில இந்த சாதி மதங்கள தூக்கிட்டு அழுவுறீங்க... அது இல்லேன்னா பூமியும் சொர்க்கம்தானே..!!"

கூட்டம் அதிர்ந்தது.குரு மவுனம் ஆனார் !

சுபொஅ.
5)3/2023.