இரண்டு முதியோர்கள்
வாழ்வை அசை போட்டபடி
நேற்றின் நினைவில்
மூழ்கி அளவளாவினர்!
தலைமுடி முன் வெட்டையும்
குடுமியையும் அறுத்தெறிய
ஆசைப்பட்டும் முடியாமல்
புழுங்கியதை …
மெல்ல எல்லாம் மாறியதை…
ஒட்ட வெட்டிய பின்
முன் தலையில்
பப்பென கூடுபோல்
தலைவாரியக் கடந்த காலத்தை
தலைமுடியை சுருட்டி
முன்நெற்றியில்
அலைபாயவிட்ட அழகை
விதவிதமாய் கிருதா வைத்து
பெரியவங்களிடம்
வாங்கிக் கட்டிய வசைகளை …
மிலிட்டிரி கட்
ஹிப்பி கட்
ஷார்ட் கட்
மீசை தாடி வகை வகையாய்
இப்போது
பிள்ளைகள்
கட்டிங் செய்வது
தனி ரகம்
மயிரில் இருந்து
வாழ்க்கை மதிப்பீடு வரை
மாறிக்கொண்டேதான் இருக்கும் !
இதயமும் மூளையும்
சுருங்கிப் போனவர்கள்
மாற்றங்களுக்கு எதிராய்
புலம்பிக் கொண்டேதான் இருப்பார்கள் !
சுபொஅ.
12/02/25 .
0 comments :
Post a Comment