பைத்தியங்களிலே
அந்த மதம்
இந்த மதம் என்பது உண்டோ ?
பையித்தியங்களில்
அந்த சாதி
இந்த சாதி பாகுபாடு உண்டோ ?
பைத்தியங்களில்
அந்த இனம்
இந்த இனம் பிரிவினை உண்டோ ?
பையித்தியங்களில்
அந்த நாடு
இந்த நாடு வேறுபாடு உண்டோ ?
பின் ஏன்
அவர்களைப் பைத்தியம் என்கிறீர்கள் ?
அன்புக்கு
ஏங்குகிறவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் ?
மனச்சிதைவும்
புறக்கணிப்பும் வரைந்த கோணல் ஓவியங்கள்
மானுடத்தை
உங்களிடம் தேடிநிற்கும் ஏமாளிகள் !
அவரல்ல பைத்தியங்கள்
எங்கும் எப்போதும்
வெறுப்பை
விதைப்போரே மெய்யான பைத்தியங்கள் !!
மெய்யான பைத்தியங்கள்
மொய்த்திருக்கும் உலகில்
சுற்றி ஓர்
முறை நீவிர் உற்றுப் பார்த்ததுண்டா ?
காரிய
பைத்தியங்கள் ! நாற்காலி பைத்தியங்கள் !
லஞ்சப்
பைத்தியங்கள் ! லாபப் பைத்தியங்கள் !
ஆன்மீகப்
பைத்தியங்கள் ! ஜோதிடப் பைத்தியங்கள் !
ஆயுதப்
பைத்தியங்கள் ! யுத்த பைத்தியங்கள் !
மதப்
பைத்தியங்கள் ! சாதிப் பைத்தியங்கள் !
நுகர்வுப்
பைத்தியங்கள் ! நூதனப் பைத்தியங்கள் !
எத்தனையோ
பைத்தியங்கள் எங்கு பரவிநிற்க !
யாரை
நீங்கள் பைத்தியம் என்கின்றீர் ! பைத்தியங்களே !
சுபொஅ.
13/8/24.
0 comments :
Post a Comment