தினம் ஒரு சொல் .61 [ 30 /10/2018 ]
அவர் ‘GENTLE MEN’ ‘ஜெண்டில் மேன்’ என சிலரைப் பற்றிச் சொல்கிறோம்
.அடுத்து கொடுக்கும் விளக்கம் நம் தலையைச் சுற்ற வைக்கும். “அவர் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார் .” அதோடு
நின்றாலாவது பரவாயில்லை . அதற்கும் மேலே சென்று சொல்வர் “தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார் .” ஆக சுற்றி என்ன நடக்குது என்கிற
அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பவர் எப்படி ஜெண்டில் மேன் ஆக முடியும்
?
ஆங்கிலத்தில் அதனை புரிந்து கொள்வதற்கும் நடப்பில்
நாம் புரிந்து கொள்வதற்குமே வேறுபாடுண்டு . அடுத்தவர் விஜயத்தில் தேவையற்று மூக்கை
நுழைக்காமல் ; சொன்ன சொல்லைக் காப்பாற்றி ,ரெச்பான்சிபில் சிட்டிஜனாக பொறுப்பான குடிமகனாக
இருப்பதையே ஜெண்டில் மேன் என வெளிநாட்டவர்
அர்த்தப்படுத்துவர். இங்கு தலைகீழாக உள்ளது . என்ன செய்வது ?
யாரும் நம்மை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக
, எல்லோரிடமும் நல்ல பிள்ளையாய் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக , எதையும் கண்டும்
காணாமல் நழுவுகிற மனிதராக ‘ஜெண்டில் மேனாக’
வாழ்வதைவிட கேவலம் வேறெதுவும் இல்லை . நடுநிலை என்பதெல்லாம் சுத்த ஏமாற்று ! நீங்கள்
எந்தப் பக்கம் என்பதே வரலாறு நெடுகக் கேள்வி!
இங்கு தேவை நாம் புரிந்து கொண்டிருக்கிற ஜெண்டில்
மேன்கள் அல்ல .சமூகத்தில் நடக்கும் அநீதிகள் ,அக்கிரமங்கள் கண்டு பொங்குகிற மனிதரே
, சாதி மத வேறுபாடின்றி , ஆண் பெண் வேறுபாடின்றி சக மனிதரை நேசிக்கிற ,மதிக்கிற மனிதரே
, நமக்குத் தேவை . இவரை கலகக்காரர் ,புரட்சிக்காரர் ,முற்போக்காளர் ,பிழைக்கத் தெரியாதவர்
, என எப்படி வேண்டுமானலும் அழையுங்கள் .ஆனால் அவரே நமக்குத் தேவை .
காந்தி பொம்மை அல்ல நமக்குத் தேவை . அநீதிக்கு
எதிராய் உரக்கப் பேசுகிற - கூர்ந்து கேட்கிற – நெருப்பாய் விழிக்கிற மனிதரா , இல்லை
‘ஜெண்டில் மேனா ” நீங்கள் யார் ? முடிவு செய்து விடுங்கள் !!!
Su Po Agathiyalingam
0 comments :
Post a Comment