தினம் ஒரு சொல் .50 [ 18 /10/2018 ]
எலித் தொல்லை ஓய்வதே இல்லை . எட்டாவது மாடிக்கும்
வந்துவிடுகிறது .எலிமருந்து ,எலி பிஸ்கேட் ,எலி பேஸ்ட் எல்லாம் முயற்சி செய்தாயிற்று
.பலனில்லை .எலிப் பொறியும் கருவாடுமே ஆகச் சிறந்த வழி .ஆயினும் சில வாரங்களிலேயே மீண்டும்
எலி வந்துவிடும் .
கொசுவும் அப்படித்தான் எத்தனை மாடியாயினும்
முகவரியைத் தெரிந்து வந்துவிடும் .விதவிதமான கொசுவத்தி மருந்து எல்லாம் அதற்கு டானிக்
ஆகிவிடுகிறது . நொச்சி இலை கொஞ்சம் பலன் தரும் ஆயினும் கொசுவிலிருந்து தப்ப வலையே உத்திரவாதமான
ஒரே வழி .
கரப்பான் பூச்சிக்கு நீங்கள் மருந்தை மாற்றி
மாற்றி அடிக்கிறீர்கள் . தன்னை எப்படியோ அதற்கொப்ப தகவமைத்து மீண்டும் வந்து விடுகின்றன
.எல்லா உயிரினங்களும் தன்னை சூழலுக்கு ஒப்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுகின்றன
. வெற்றி பெறுகிறுகின்றன .
மனிதரென்ன சூழலின் அடிமையா ? இல்லவே இல்லை
. மனித குலமும் தொடர்ந்து போராடி வெற்றிக்கொடி நாட்டியே வந்திருக்கிறது .
என் அறிவுக்கு எட்டியவரை பொதுவாய் எந்த விலங்கும்
உயிரினமும் தற்கொலை செய்து கொள்வதில்லை . தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்வதில்லை
.ஆனால் மனிதர் மட்டுமே தற்கொலை செய்கின்றனர் . இயற்கையை ஒட்ட உறிஞ்சி தமக்குத்தாமே
குழிபறித்துக் கொள்கின்றனர் . ஆயுதங்களைக் குவித்து தமக்குத்தாமே கொள்ளிவைத்துக் கொள்கின்றனர்
. நச்சுப் புகைகளால் ,விஷக்கழிவுகளால் காற்றை ,நீரை மாசுபடுத்தி பேரழிவை விளைவித்துக்
கொள்கின்றனர் .
எலியும் ,கொசுவும் ,கரப்பான் பூச்சியும் இன்னபிறவும்
தாக்குதல்களைத் தாங்கி மீண்டெழுகிறதே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதே அதுபோல் உங்கள்
சந்ததியால் முடியுமா ? இல்லை அழிந்துதான் போகவேண்டுமா ? யோசித்தால் விழிப்போம் ! யோசிக்க
மறந்தால் வீழ்வோம் .வேறென்ன சொல்ல … .
0 comments :
Post a Comment