ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொருவரைப் பற்றியும்
வண்டி வண்டியாய்க் குறைகள் இருக்கு
வகைவகையாய்க் குற்றச்சாட்டுகள் இருக்கு
ஆனாலும்
சில நிகழ்ச்சிகளில் சந்திக்க நேரும் போது
கட்டி அணைப்பதும் கதைத்து மகிழ்வதும்
“பழைய போணை மாற்றும் போதும்
உங்க போண் நம்பரும் போயிடிச்சு..
இப்ப சொல்லுங்க….” என அவசர அவசரமாய்
போண் நம்பரைக் கேட்டு பதிவு செய்துவதும்
சிறந்த நடிப்புடா சாமி !
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
சிறந்த நடிகன்
வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறான்/ள்
எங்கே அழவேண்டும்
எங்கே சிரிக்க வேண்டும்
எங்கே நழுவ வேண்டும்
நவரசங்களையும்
வாழ்க்கை கற்றுக்கொடுத்துவிடுகிறதோ !
’நான் நடிகரில்லை’ என
ஒவ்வொருவர் சொல்வதும் ’நடிப்புத்தான்’.
சுபொஅ.

0 comments :
Post a Comment