அவர்களின் மூக்கு அலாதியானது
மாட்டுக்கறி வாசம் மட்டுமே அறிந்தவை.
அவர்கள் கண்ணின் பார்வை வித்தியாசமானது
குல்லா மட்டுமே கண்ணில் தெரிந்தவை
அவர்களின் கால்கள் அபூர்வமானவை
கலவரம் செய்ய மட்டுமே ஓடுபவை
அவர்களின் இதயம் அரியவகை
வெறுப்பை மட்டுமே உமிழ்பவை
அவர்களின் மூளை விசித்திரமானவை
பொய்களும் புராணப் புளுகுகளும் மட்டுமே நிரம்பியவை
அவர்கள் யாரென
நான் சொல்ல வேண்டுமோ
சுபொஅ.
13/06/25.
0 comments :
Post a Comment