மின்னலும்
இடியும்
வானத்தைக்
கிழித்துப் போடுகிறது
மழை கொட்டுகிறது.
கிழித்த வானத்தை
டக்கென யார்
தைத்தது ?
மழை சட்டென
நிற்கிறது .
மீண்டும்
இதே விளையாட்டு
கிழிப்பதும்
தைப்பதுமாய்
மண்டையைப்
பிளப்பதுபோல்
வெடிக்கிறது
இடி
கண்ணை மூடவைக்கிறது
மின்னல்
பயமில்லைதான்…
ஆனால்,
இடி வெடிக்கும்
போது
ஓடிவந்து
கட்டிப்பிடிக்கும்
பேரன் பேத்திகள்
வெளிநாட்டில்
இருக்கும் போது
இந்த தனிமை
பயமுறுத்துகிறதோ
?
நான் இணையரைப்
பார்க்கிறேன்
அவள் என்னைப்
பார்க்கிறாள் !
சு.பொ.அ.
22/5/2023
இரவு 7.30 மணி,
0 comments :
Post a Comment