தினம் ஒரு சொல் … 10 [ 31 /8/2018 ]
ஒரு கவிதை ,ஒரு கதை ,ஒரு திரைப்படம் ,ஒரு புதினம் , ஒரு ஓவியம் ,ஒரு நாடகம் ,ஏதேனும் ஒரு கலைப் படைப்பு முற்போக்கா , பிற்போக்கா என்பதை துல்லியமாக அளக்கும் அளவுகோல் எங்கேனும் இருக்கிறதா ?
ஒவ்வொருவருக்கு ஒரு புரிதல் ;ஒரு பார்வை ; ஒரு முழக்கோல் இருக்கக்கூடும் .ஆனாலும் விவாதம் ஓயாது .
ஒரு முற்போக்காளர் படைத்தார் என்பதாலேயோ அல்லது சீரியஸ் சினிமா ,சீரியஸ் படைப்பு என முத்திரை குத்துவதாலோ அது முற்போக்குப் படைப்பு ஆகிவிடாது .
படைப்பாளி வெகுஜன தளத்தில் இயங்குவதாலோ . புரிதலில் பிழை உள்ளவர் என்பதாலோ அப்படைப்பு பிற்போக்கு படைப்பு என ஒதுக்கிவிட முடியாது . .
அந்தப் படைப்பு எந்த அளவு மக்களைச் சென்றடைகிறது ; மேலும் அப்படைப்பு வாசகர் .ரசிகர் உள்ளத்தில் எந்தவித உணர்ச்சியை கொம்பு சீவி விடுகிறது என்பதே ஆகப்பெரும் அளவுகோல் !
அப்படைப்பு ஒடுக்கப்பட்ட மக்கள்பால் ஒரு சொட்டுக் கண்ணீரை ; சமூக அவலங்களுக்கு எதிராக ஒரு சிறு முணுமுணுப்பை ; சமூக கோபத்தின் சிறு பொறியை உருவாக்குமாயின் ஆயிரம் குறை இருப்பினும் அப்படைப்பைக் கொண்டாடுக !
தத்துவ முலாம் பூசப்பட்டு – அதேநேரம் செத்தவன் கை வெற்றிலை பாக்காய் அசைவற்று கிடக்கும் நூறு படைப்பைவிட மேலே சொன்ன படைப்பு நூறுமடங்கு மேலானது அல்லவா ?
“
0 comments :
Post a Comment