
இறுக்கிய புடவை மடிப்புகளிலிருந்து...
சி கலாவதி
வரலாற்றாசிரியர்களின் பெண்ணிய நோக்கம் என்பது வரலாற்று ஏடுகளில் இடம் பெறாத சாமான்ய மனிதர்களின் வாழ்வை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாகும்.
பெண்ணிய எழுத்தாளர்கள் பிற சமுதாய அக்கறையுள்ள எழுத்தாளர்களுடன் சேர்த்து சமூக ஓட்டத்தை மாற்றக்கூடிய மக்களின் போராட்டங்களையும் தனி மனிதர்கள் மற்றும் குழுக்கள். போராட்டங்கள் மூலமாகத் தங்கள் வாழ்வை மாற்றும் முயற்சியில் சந்தித்த தோல்விகளையும் வெளிக் கொணர்கிறார்கள். இ.பி. தாம்ஸன் கூறியதைப் போல் வெளிவராத பல்வேறு தோல்விகளைக் கணக்கில் கொண்டு வரும் முயற்சிதான் இது.
மைதிலி சிவராமன் தன் பாட்டியின் அந்த நீல நிறப்பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும், பிற ஆதாரங்களையும் அவரது 81 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலைப் படைத்திருக்கிறார்.
அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை சுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயரவாழ்வு பற்றி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1897லிருந்து 1978 வரையிலான சுப்புலட்சுமி அவருடைய கால சமுதாயச் சூழலுக்கு ஒவ்வாத மாறுபட்டவராகவே இருந்தார். மைதிலி சிவராமன் அவர்கள் குறிப்பிடும் போது சுப்புலட்சுமி அவருக்கு முன் மாதிரியாக இருந்தார். எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவருடைய தாத்தா பிஆர்ஜியின் கண்ணோட்டத்தையும் உணர்வுகளையும் விமர்சன நோக்கில் கவனிக்க ஆரம்பித்தார். எழுபது மற்றும் எண்பதுகளில் பெண் சுதந்திரம் குறித்த கருத்தெழுச்சியால் பெண்கள் . இயக்கத்தில் ஈடுபட்ட போது தன் பாட்டி சுப்புலட்சுமியை புரிந்து பகிர்ந்து கொள்ள வேண்டி அவருடைய வேர்களைத் தேட ஆரம்பித்தேன் எனக் குறிப்பிடுகிறார். 1978இல் அவர் இறந்த பிறகு சுப்புலட்சுமியின் புத்தகங்களைப் பார்த்தபோதுதான் எட்கர்னோ (நுனபநச ளடிற) எழுதிய ரெட் டார் ஓவர் சைனா (சுநன ளுவயச டிஎநச ஊயே ) என்ற புத்தகத்தின் முதற்பதிப்பைக் கண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.
2002-ஆம் ஆண்டு மைதிலி அவர்கள் மிகச்சிறந்த வரலாற்றாசிரியர் உமா சக்ரவர்த்தியை சந்தித்தபோது அந்த நாட்குறிப்பில் தன் பார்வையை ஓட்டிய அவர் நீங்கள் ஒரு தங்கச் சுரங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். இன்றே உங்கள் பணியைத் துவக்குங்கள் என்று கூறினார். மனத்தடைகள் அகன்றன. சவால் உருவானது. அத்தனை இன்னல்களுக்கு இடையே தனக்கென்று ஒரு பொது வாழ்வை உருவாக்கிக் கொண்ட சுப்புலட்சுமியின் பேத்தியாகிய நான் அந்த வாழ்வை எழுத்தின் மூலமாக வெளிக்கொணர உறுதிபூண்டேன் என குறிப்பிடுகிறார் மைதிலி சிவராமன்.
சுப்புலட்சுமியின் நாட்குறிப்பை ஆதாரமாகக் கொண்டு நான் மேற்கொண்ட முயற்சிக்கு ஊக்கம் கொடுத்தது மாளவிகா கார்லேகரின் கீழ்க்கண்ட வரிகள்.
இலக்கிய உலகும் வரலாற்று உலகும் தங்கள் கருத்துக்களைக் இறுக்கி புடவை மடிப்புகளில் ஒளித்து வைத்திருந்த பெண்களின் எழுத்துகளையும் வாழ்க்கையையும் கண்டு கொள்ளாமல் கடந்தே சென்றிருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டு வங்காளப் பெண்ணான ராந்திரியைப் போல் அல்லாமல் சுப்புலட்சுமியின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த நாட்குறிப்பின் அழகிய கையெழுத்து வரிகள் கடினமாக கறாராக எழுதப்பட்டிருந்தாலும் ஒரு சில வரிகளைத் தவிர மற்றவை மூலம் அவரைப்பற்றி அறிந்து கொள்வது எளிதாக இல்லை. தன்னுடைய பெண் பங்கஜத்தை சாந்திநிகேதனில் சேர்த்துப் படிக்க வைக்கும் ஆசை நொறுங்கிப் போன செய்தி கூட அந்த நாட்குறிப்பில் வெளிப்படையாக இடம் பெறா வண்ணம் ஒரு அடர்த்தியான மௌனம் நிலவியது. அவருடைய குணாதிசயத்தை மட்டுமல்ல. வெளிப்படையாக சகஜமாக எதையும் பேசாத மனோபாவத்துடன் அவர் வளர்க்கப்பட்ட விதத்தையும் காட்டுகிறது. எல்லாவற்றையும் விட தன் வாழ்க்கையைத் தானே ஆராய்ந்து வருந்தி சுய வாக்குமூலம் போல் இத்தகைய நிகழ்ச்சிகளை எழுதுவது எவ்வளவு வலியளிப்பதாக இருந்திருக்கும் என்பதைத் தான் அந்த மௌனம் உணர்த்துகிறது. சுப்புலட்சுமி ஒரு தனிமை விரும்பி. தமிழ் பிராமண வாழ்க்கைமுறை பெண்களை ஊமையாக்கி அவர்களுக்குரிய தனி மனித இதயத்தைத் தடுத்து விடுகிறது.
அவருடைய கனவு நிறைவேறாத போதெல்லாம் கழிவிரக்கத்தைத் தூண்டக் கூடிய தாகூரின் வரிகள் அவருடைய நாட்குறிப்பில் எழுதப்பட்டுள்ளன. 30.8.1924 அன்று நான் மறந்து விடுகிறேன். எப்போதும் மறந்துவிடுகிறேன். என்னிடம் பறக்கும் குதிரை இல்லையென்பதையும் நான் வசிக்கும் வீட்டின் கதவுகள் எல்லாம் மூடியிருக்கிறது என்பதையும் என்று எழுதியுள்ளார். உப்பு சப்பற்ற தன்னுடைய வாழ்க்கையில் இருந்து வெளியே வரவேண்டி அவர் செய்த முயற்சிகள் அனைத்தும் எல்லாப்பக்கங்களிலும் தடுக்கப்பட்டன. தனி வாழ்விலும் பொது வாழ்விலும் சுற்றி வந்து அங்கீகாரத்துடன் அவரோடு வாழ்ந்தது போலன்றி சுப்புலட்சுமி இரண்டு அறைக்குள்ளே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் வாழ்ந்தார்.
கருத்துகளை எழுதுவது பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பானதாக இருந்ததில்லை. மற்றையோர் அவற்றைப் பார்த்து விடுவதற்கும் பெண்ணுக்கான கட்டுப்பாடு மீறல்களைக் கடிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மை. தன்னுடைய ஏதேனும் ஒரு தவறான செய்கையோ அல்லது அரசியல் வாழ்வில் ஈடுபடுவதற்கான ஆதாரமோ தன் கணவர் கையில் சிக்கும்போது தன் சுதந்திரத்திற்கான முடிவு மற்றும் மகள் பங்கஜத்தின் படிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று சுப்புலட்சுமி அஞ்சியதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
தன் வாழ்நாளில் பள்ளிக்கே சென்றிராத சுப்புலட்சுமி புத்தகங்கள் பால் கொண்டிருந்த அணுகுமுறை பற்றி பேத்தி லலிதாவும் வியந்து குறிப்பிட்டுள்ளார். கல்வியானது ஒவ்வொரு வகையிலும் பல்வகைப் படிப்புகளில் அதிகமாக அறிவை விருத்தி செய்து கொள்ளும் தாகத்தை உண்டாக்கியுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் அறிவைப் பெற விரும்புகிறேன். அரசியல், அறிவியல், இயற்கை என அனைத்திலும் தகவல் பெற விரும்புகிறேன். அது பொதுவாக அனைத்திலும் என்னை அறிய வைப்பதுடன் என்னை ஒரு கற்ற பெண்ணைப் போல் ஆக்கும் பள்ளிக்கூடத்திற்கேப் போகாத ஒருவர் கூட எவ்வளவு விவரவம் தெரிந்தவராக இருக்கலாம் என்பதை சுப்புலட்சுமி நிரூபித்துவிட்டார்.
குறிப்பாக சுப்புலட்சுமியைப் பற்றி சொல்வதென்றால் 11 வயதில் திருமணம் செய்து 14 வயதில் தாயானவர். தோழி கிரேஸூடன் ஆழமான நட்பு கொண்டார். தனியாக வசித்தவர் தன் குழந்தைகளின் மரணத்தினால் சோகத்தில் ஆழ்ந்தவர். அதன் காரணமாக மயக்கங்களுக்கு ஆட்பட்டவர். தனது பெண்ணுக்கு கல்வி அளிக்க மெட்ராசுக்கு ஓடியவர். பாரதியின் கவிதை வரிகளால் ஆதரிக்கப்பட்டவர். மறியலில் ஒரு கருப்புக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பங்கு பெற்று தன் மீது சாக்கடைத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கக் கண்டவர். குருதேவரின் வரிகளையும் கவிதைகளையும் கண்டு பிரமித்தவர். பள்ளியில் சென்று படிக்காதவருக்கு மெட்ரா பல்கலைக்கழக நூலகம் அளித்த உறுப்பினர் அந்தது பெற்றவர். பல்வேறு காவியங்களிலான புத்தகங்களைப் பேராவலுடன் படித்தவர். அந்தக் காலக்கட்டத்தின் கலைப்புத்துயிர்ப்பில் ஊறித் திளைத்தவர். ஒரு சில புகழ் பெற்ற அரசியல் செயல்வீரர்கள், கலைஞர்களுடன் நட்புப் பூண்டவர். மங்கலான சிம்னி விளக்கின் ஒளியில் தன் நாட்குறிப்பு எழுதியவர். பேச்சு மற்றும் மௌனம் குறித்து ஹனஎநைநே சுஉ எழுதியவை சுப்புலட்சுமியின் நாட்குறிப்பை மொழி பெயர்க்க உதவுகின்றது.
மௌனம் கவனமாக செயல்படுத்தப்படும் திட்டம். ஒரு வாழ்க்கையின் ஆதாரவரைபடம் அதில் ஒரு அர்த்தமுண்டு அதற்கு வரலாறு உண்டு. வடிவம் உண்டு அதைக் குழப்பாதீர்கள்.
அது வெறுமை என்று எண்ணி சுப்புலட்சுமியின் நாட்குறிப்பில் ஒரு மிக முக்கியமான மிகவும் புதிரான பதிவு 1925 ஜனவரி 20-இல் காணப்படுகிறது.
சுப்புலட்சுமியைப் போல் தனித்துவம் காணும் சுதந்திரம் மறுக்கப்பட்டு அதற்கு மாறாக மிருகத்தனமான ஆணாதிக்கக் கோட்பாடுகள் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் உறிஞ்சப்படும் பெண்கள் எண்ணற்றோர் உள்ளன ரென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அனைவரையும் மனநல மருத்துவமனையில் தள்ளிய விதியும் இல்லை. ஒவ்வொரு சூழலையும் மக்கள் ஒவ்வொரு வகையாகச் சந்தித்தனர், சந்திக்கின்றனர். அவர்கள் சிக்கலைக் கையாளும் விதமும் வேறானவை.
பி.ஆர். ஜியைப் பற்றிக் கூறும் போது அவர் தன்னை இன்னொரு ஷேக்பியராக உருவாக்கிக் கொண்டிருந்தார்.
பங்கஜம் கூறும்போது தமது பெற்றோரின் ஐம்பதாண்டுக்கும் அதிகமான திருமண வாழ்வில் தடாவில் கழித்த இரண்டாண்டுகள் தான் மிக முக்கியமான காலமென தனது நினைவலைகளில் எழுதியுள்ளார். எனது தாயும் தந்தையும் சேர்நது ஷெல்லி, கீட், ஷேக்பியரைப் படித்து அவற்றிலிருந்து மேற்கோள்களை இணைத்து எப்படி குறிப்பெடுத்தோமென எனது தாய் கூறியுள்ளார்.
இந்நிலையில் இருந்த பி.ஆர்.ஜி. சுப்புலட்சுமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த இரண்டு மாத காலங்களில் ஒரு முறை கூட வந்து பார்க்காமல் இருந்தது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு வேளை பிந்தைய கால கட்டங்களில் சுப்புலட்சுமியின் செயல்பாடுகள் அவரது மனதில் தாக்கத்தில் ஏற்படுத்தியிருக்கலாம் என யூகிக்கக் தோன்றுகிறது.
உடல்நலக் குறைவிற்கு முன் பிறவியில் செய்து கரும வினைகளின் பலனே என்று ஞ.சு.ழு. கூறியிருப்பது பிற்போக்குத்தமாக ஆணாதிக்க உணர்வினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
சுப்புலட்சுமியின் தாய் காமாட்சியின் வாழ்நாளை வாசிக்கும்போது நெஞ்சை நெகிழ வைக்கக்கூடிய நிகழ்வாகவும் கண்களில் நீர்மல்க கூடிய நிலையையும் உருவாக்குகிறது.
பி.ஆர்.ஜியைப் போலவே காமாட்சியின் கணவர் மனைவியின் கஷ்டங்களைக் குறைப்பதற்கு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. பகலில் அவர் மனைவி மாமியாரின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது அவர் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அவர் அம்மாவிடம் தன் மனைவியின் சார்பாகப் பேசுவதோ அந்த வீட்டின் மருமகள் என்ற அடையாளத்தை மீறி எதையானது வழங்குவதோ அப்போது மட்டுமல்லாது சில குடும்பங்களில் தற்போதும் பெரும் புரட்சியே என்பதில் ஐமில்லை.
உண்மையான இந்து விதவை என்பவள் ஒரு பொக்கிஷம் என்று நான் நம்புகிறேன். மனித இனத்திற்கு இந்துயிசம் அளித்த கொடைகளில் அவள் ஒருத்தி... இந்து விதவையை விட அற்புதமான வேறொன்றைக் கடவுள் படைக்கவில்லை. என விதவை பற்றி காந்தியின் மேற்கோளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்தியா முழுவதிலும் கைம்மை என்பது முன் பிறவியில் அந்தப் பெண் புரிந்த பாவங்களுக்கான தண்டனையாகவே கருதப்பட்டு வருகிறது. கணவனுக்குக் கீழ்ப்படியாமை, கணவனுக்குச் செய்கிற துரோகம் அல்லது அவனைக் கொலை செய்தது போன்ற பாலங்களுக்கு இந்தப் பிறவியில் வழங்கப்படும் தண்டனை என மக்கள் மூடத்தனமாக நம்பப்படுவதையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்.
மைதிலி சிவராமன் ஒரு மூத்த சமூக சேவகர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலும் இந்திய கம்யூனிடு கட்சி (மார்க்சிட்)யிலும் மூத்த தலைவர். ரேடிகல் ரெவ்யூ-ஆங்கில இதழின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். மேலும் ஒரு சிறந்த பெண்ணிய எழுத்தாளரும் கூட. பெண்ணுரிமை பற்றியும் உலகமய காலகட்டத்தில் பெண்ணுரிமை குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் ஹிந்து ஆசிரியர் என். ராமுவுடன் இணைந்து பல கள ஆய்வுகள் மேற்கொண்டு சம்பவங்களைப் பதிவு செய்துள்ளார். வால்பாறை தொழிலாளர் போராட்டத்தை வால்பாறை வீரகாவியம் என்ற தலைப்பிலும் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் அவர் வரலாற்று ஆசிரியரும் ஆவார்.
இக்கணிப்பொறி உலகில் மூத்தோர்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்களது செயல்பாடுகளை நினைவில் கொள்ள மறக்கும் இச்சமுதாயத்தில் நூலாசிரியர் மைதிலி சிவராமன் அவர்கள் தங்களது மூதாதையரின் வரலாற்றினை நீல வண்ண டிரங்குப் பெட்டியில் உள்ள மடிந்த மக்கிய வாசகங்களைக் கொண்டு பெரும் முயற்சி செய்து நூல் வடிவமாக்கி உள்ளது செயல்திறன் வாசகர் அனைவரையும் வியக்கச் செய்கிறது.
சுப்புலட்சுமி எழுதி வைத்துள்ள குறிப்புகளுடன் கூடிய மேற்கோள்கள் தத்துவார்த்த கோட்பாடுகள் பற்றிய அவரது ஆழமான அறிவை வெளிப்படுத்துவதுடன் அவரது கணவரின் ஆன்மீகப் பார்வையிலிருந்து அவருடையதை கூர்மையாக வெளிப்படுத்துகின்றன.
சீன முனிவர் லாவோ - சே கூறினார், நாம் இறந்து போவோம். ஆனால் அழிய மாட்டோம். ஏனெனில் நாம் நமது உடல் ரீதியான வாழ்வை இழக்கும் போது இறக்கிறோம். நமது மனிதத்தன்மையை இழக்கும்போது அழிகிறோம். மனிதத் தன்மைதான் மனித இனத்தின் தர்மம்.
என்ற தாகூரின் மொழிகளுக்கேற்ப சுப்புலட்சுமி இறந்தும் வாழ்கிறார் என்பதை இந்நூல் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வாழ்க்ஒகையின் துகள்கள் (ஒரு குடும்ப ஆவணத்திலிருந்து...)
மைதிலி சிவராமன், தமிழில் கி. ரமேஷ்
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ தெரு,
சென்னை 600 018.
பக். 216. விலை ரூ. 100/-
A great treasure has been brought to light very lately...Such valuable mines have spread throughout the life and history but not so far bring to limelight.Touching story of simple human.
ReplyDelete