Pages

Wednesday, 19 May 2010


நட்பு

பொம்மைக்காக
போட்டசன்டையை
பொக்கென
மறந்து கொஞ்சும் குழந்தையாய்..

சடுகுடு விளையாடும்போது
சொன்ன சின்ன பொய்க்காக
கட்டிப்புரண்டதை
அப்பவே மறந்து
தோளில் கைபோட்டபடி ....

காதல் வம்பளப்பில்
ஒருவரை ஒருவர் சீண்டி
சில நாட்கள் பேசாமலிருந்து
பின் கைகுலுக்கி உளம் மகிழ்ந்ததை ..

ஒருவர் கல்யாணத்துக்கு ஒருவர்
மனமெல்லாம் இனிக்க
ஓடி ஓடி உதவியதை ...

திருமணமான புதிதில்
விருந்து கொண்ட்டாட்டம்
என
விகல்பமின்றி சுற்றியதை ...

நட்பு என்று அசைபோட்டு வந்தேன்
கடன் படும் வரை ...
சுபொ

1 comment:

  1. அருமையான கவிதை தோழர்.
    எங்கே வந்து நிற்கப் போகிறீர்கள் என்பதை ஊகிக்க முடிந்த வகையைச் சார்ந்த படைப்பு தான் என்றாலும், கடைசி இடத்தில் ஒரு 'தாக்கு' இருக்கும் என்று தெரிந்தாலும், அதன் பயணம் எத்தனையோ அனுபவங்களைச் சுமந்து வருகிறது...

    பணத்தின் எதிரில், சகல உறவுகளும் ஈவிரக்கமின்றி சிதைக்கப்படும் என்று மார்க்சிய ஆசான் சொன்னதை நமது சக மனிதர்களுடன் இணைந்து நாமும் நிரூபித்து வருகிறோம்.

    வாழ்த்துக்கள்.

    எஸ் வி வி

    ReplyDelete