தமிழ் செம்மொழி
கேட்க பேச இனிமையானது
பழமையானது
இலக்கிய வளம் மிக்கது
வாழ்வியல் நுட்பமுடையது
எல்லாம் சரி எல்லாம் சரி
ஒற்றை கலாச்சார நுகத்தடியில்
உலகை பிணைக்க
வாய்பிளந்து நிற்கும்
உலகமய பூதம்
ஆங்கிலம் மட்டுமே அறியும் என்பதால்
எல்லா மொழியும் மிதி படும்போது
என் தமிழ் என் செய்யும் ?
அனைத்து மொழிக்கும் ஆபத்து
உலகம் முழுதும் உரக்க குரலெடுத்து
எல்லோரோடும் தோள்கொடுத்து
மொழி வழி இன வழி
பன்முக உலகை காத்திட
எது வழி என்றே நீ யோசி
போற்றி பஜனையில்
வாழ்த்து மழையில்
வாழ்த்தி மகிழ்ந்தால்
வாழுமோ தமிழ் ?
மாறும் உலகை மனம் கொண்டு
மர்ற்றம் பல நாம் கண்டு
புதுயுக தமிழை
ஆயுதமாக்கு
உட்பகையை உலகபகையை
நொறுக்கி தள்ளு
செம்மொழி காக்க
செம்பாதை இதுவே
சுபொ அகத்தியலிங்கம்
No comments:
Post a Comment