ஊழல் கடவுள் போல எங்கும் நிறைந்தது
காற்று போல எங்கும் நுழைவது
தீயை போல பற்றி பரவுவது
ஊழலின் ஆற்ற லை உரைக்கவும் கூடுமோ
நீதி தேவன் மயங்கி விழுகிறான் - அப்போதும்
பணம் உள்ளவன் மடியில் சாய்கிறான்
ஊடகங்கள் பல்லை இளித்து
பொய்யில் புன்னகைகிறது
சில்லறை காசுகள் லஞ்சமாக வங்கி
ஊழல் பெயரை அசிங்கப்படுத்துவதா
டன் கணக்கில் தங்கம் வாங்கு
மூட்டை மூட்டையாய் நோட்டுகள் வாங்கு
ஊரெங்கும் நிலத்தை வளைத்து போடு
பங்குகள் வாங்கு கோடி கோடி யாய் குவி
நீதி வளையும் அரசு நெளியும்
நிபந்தனை ஒன்று தான்
சுரண்டல் தொடர துணையாகவேண்டும்
மறன்றும் மக்களை நினைக்ககூடாது
ஆம்
உள்ளவனுக்கே துணையாகும் கடவுளை போல
ஊழல் செயதால் பாவம் இல்லை .
சுபொ அகத்தியலிங்கம்
No comments:
Post a Comment