Pages

Thursday, 10 July 2025

திரும்பிப் பார்க்கிறேன்

 


திரும்பிப் பார்க்கிறேன்

 


 

திரும்பிப் பார்க்கிறேன்

சக பயணிகளைக் காணோம்

பாதையை தவறவிட்டோர் சிலர்

பாதியிலே முடித்துக் கொண்டோர் சிலர்

சூழ்நிலைச் சிறையில் அடைபட்டோர் சிலர்

வெகுதூரம் முன்சென்றுவிட்டோர் சிலர்

நம்மை மறந்து விட்டோர் சிலர்

நாம் மறந்துவிட்ட சிலர்

திடீர்திடீரென திரும்பிவரமுடியா இடத்துக்கு

பயணப்பட்டுவிட்ட பலர்

இன்னும் எஞ்சியிருப்போரும்

அலைபேசியிலும் செவி வழியிலும்

கொஞ்சம் அவ்வப்போது பேசிக் கொள்ள

நினைவலையில்

வந்தபடியும் சென்றபடியும்

மறக்க முடியா சகபயணிகளோடு

கழியும் இரவுகள் .

 

சுபொஅ.

10/07/25.


No comments:

Post a Comment