Pages

Wednesday, 5 July 2023

பிரம்மம்.

 


 

பிரம்மம்.

 

 

காட்டிக் கொடுத்தோ

கூட்டிக் கொடுத்தோ

காலைப் பிடித்தோ - தண்ணீராய்

காசை இறைத்தோ

 

மிரட்டிப் பிடித்தோ

ஆசை விதைத்தோ

சூழ்ச்சி செய்தோ - வஞ்சகச்

சூதில் வென்றோ

 

வெறுப்பை விசிறியோ

பொய்யை பரப்பியோ

கலவர நெருப்பில் – மக்களை

மோதவிட்டோ சாகவிட்டோ

 

சிம்மாசனம் கைக்கொள்

கூறு கட்டி ஏலம் எடுத்தோ

‘செங்கோல்’ பிடி ! – அதிகாரமே

தத் துவம் அஸி

[நீ அதுவாக இருக்கின்றாய்']

 

சுபொஅ.

6/7/2023.

 

 

சுபொஅ.

 

 


No comments:

Post a Comment