Pages

Monday, 24 July 2023

வழக்கம் போல் மக்கள்

 


வழக்கம் போல் மக்கள்


ஓர் கொடூரம் ,அநீதி

திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது .

 

தேசமே கொந்தளிக்கிறது

கடும் கோபம் ,கண்டனம்

எங்கும் இதே பேச்சு ..

 

ஆட்சியாளர்

காதுகளையும் வாயையும்

இறுகப் பொத்தி

கடவுள் சிலை போல்

அசையாதிருந்தனர்.

 

பூஜாரிகள்

புதுப்புது கதை கட்டினர்

பரிகார பூஜைகள்

பரிந்துரைத்தனர்

காலம் ஓடியது

 

வழக்கம் போல் மக்கள்

மறந்து தொலைத்தனர்

 

மீண்டும் முன்னினும்

பெருங்கொடுமையை

திட்டமிட்டு அரங்கேற்றினர்

 

காட்சிகள் பழையபடி

சென்று முடிந்தன

மறதிக்கு

மருந்தில்லை அல்லவா ?

 

மீண்டும் அதனினும்

பெருங்கொடுமை

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது .

 

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

மீண்டும்

……. …….. …….

……. …… …….

 

ஆண்டவனும் பேசவில்லை

ஆள்பவரும் பேசவில்லை.

சிலை என்றைக்குப் பேசியது ?

இரண்டும்

’அவர்கள்’ கைக்கருவிதானே….

 

சுபொஅ.

24/7/2023.


No comments:

Post a Comment