தினம் ஒரு சொல் .29 [ 27/09/2018
]
திருமணங்களை முற்போக்காய் நடத்துவதே
பெரும் போராட்டம் . ஆனால் அதைவிட பெரும் சவால் மரணத்தின் போது சந்திப்பது .
வாழ்நாளெல்லாம் பகுத்தறிவாளராய்
,முற்போக்காளராய் இயங்கிய ஒருவரின் இறுதிச் சடங்கை சகல மத ,சாதி சம்பிரதாயங்களுடன்
நடத்துவதைவிட அவரை வேறு எதனாலும் இழிவுபடுத்திவிட முடியாது . ஆனால் வாரிசுகளும் உறவுகளும்
இதனை உணர்வதே இல்லை .
இதனை எப்படி எதிர்கொள்வது ? உடுமலை
நாராயண கவிராயர் தன் இறுதி நிகழ்வை சாதி ,மத ,,சடங்கு ,சம்பிரதாயமின்றி நடத்த முன்கூட்டியே
உயில் எழுதி வைத்தார் . ஜோதிபாசு தன் உடலை மருத்துவ ஆய்வுக்கு என எழுதி வைத்தார் .
பல முற்போக்காளர்கள் மரண சாசனம் எழுதிவைத்துள்ளனர் . ஐரோப்பிய நாடுகளில் இது சகஜம்
.
மரணம் எந்த நிமிடமும் யாருக்கும்
நிகழலாம் .எனவே இங்கே இரண்டே வழிகள்தான் உள்ளன . ஒன்று , வாரிசுகளும் உறவுகளும் இறந்தவரின்
உணர்வுகளை மதித்து நடந்து கொள்வது .இரண்டு . வாரிசுகளிடம் முடிந்தவரை முன்கூட்டியே
உறுதியாய் விவரமாய்ச் சொல்லிவிடுவது .
செண்டிமெண்டாய் அடுத்தவர் கருதுவார்
எனத் தயங்காமல் ஒவ்வொருவரும் மரண சாசனம் எழுதி முன்கூட்டியே அறிவித்துவிடுவதே சாலச்
சிறந்தது .கசப்பாய் இருப்பினும் வேறுவழி இல்லை.
மரணத்திற்கு பிந்தைய நிகழ்வுகளும்
இறந்தவர் உரிமை ,விருப்பம் என்பது உணர்க !
.
No comments:
Post a Comment