Pages

Saturday, 12 May 2012

கொலைகளுக்குள்ளும்.

.


கொலையொண்ணு விழுந்திருக்கே....
சர்வசாதாரணமாய் கேட்டுத்தொலைக்க
சீறிப்பாய்ந்தன கேள்விகள்.,

ஆதாயக் கொலையா?
ஆத்திரக் கொலையா?
ஆன்மீகக் கொலையா?
அரசியல் கொலையா?

காதல் கொலையா?
கவுரவக் கொலையா?
காமக் கொலையா?
களவுக் கொலையா?

வரதட்சணைக் கொலையா?
வாய்த்தகராறுக் கொலையா?
வேலிதாண்டியதால் கொலையா?
விளையாட்டில் கொலையா?

சொத்துச் சண்டையில் சோதரக் கொலையா?
பங்குபிரிப்பதில் பங்காளிக் கொலையா?
குடும்பச் சண்டையில் எரிந்த கொலையா?
கோஷ்டி மோதலில் வெடித்த கொலையா?

கந்துவட்டி தூண்டிய கொலையா?
ரியல் எஸ்டேட் வாங்கிய கொலையா?
வியாபாரப் போட்டியில் முட்டிய கொலையா?
மோசடி துரோகம் முற்றிய கொலையா?

சாதிச் சண்டையில் தொடங்கிய கொலையா?
தேர்தல் மோதலில் கருக்கொண்ட கொலையா?
மதவெறி போதையில் கூட்டுக்கொலையா?
சேரியை எரித்த தீண்டாமைக் கொலையா?

கடன்வலை சிக்கிய விவசாயி [தற்]கொலையா?
போலீஸ்ராஜ்ய மோதல் கொலையா?
கற்பழித்து கொன்ற ஆதிக்கக் கொலையா?
சோற்றுக்கில்லா பட்டினிக் கொலையா?

போதை,கடத்தல் போட்டிக் கொலையா?
பெண்ணுக்காக மண்ணுக்காக ஏவியகொலையா?
பதவி,பணம்,பவிசுக்காக மோதல் கொலையா?
நீயா நானா அகங்காரக் கொலையா?

மூடநம்பிக்கை நரபலி கொலையா?
மூலதனத்தின் மூர்க்கக் கொலையா?
வர்க்கப் பகைமையில் விளைந்த கொலையா?
வாழ்வுரிமை காக்க வெடித்த கொலையா?

கொலைகளுக்குள்ளும்
சமூகச் சிக்கலின் சித்திரம் உண்டு.
கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தால்
நோகும் அம்பை எய்தவன் புரியும்.

5 comments:

  1. அருமையான கவிதை...\\ எதையும் நீங்கள் விட்டது மாதிரி தெரியவில்லை...
    இருந்தாலும் சில வரிகள் சேர்த்து மகிழ்கிறேன்..

    திட்ட மிட்டுச் செய்திட்ட கொலையா
    திடீரென நிகழ்ந்த தற்செயல் கொலையா

    தனிமையில் வைத்துச் செய்த கொலையா
    சாட்சிகள் பார்க்கச் சாய்த்த கொலையா

    எதிரே சென்றே வெட்டிய கொலையா
    எங்கோ பார்க்கையில் வீழ்த்திய கொலையா

    பழிக்குப் பழியாய்ப் பரிசான கொலையா
    அடியாள் வைத்துப் போட்ட கொலையா

    தொடங்கிய சுற்றில் முதலாம் கொலையா
    தொடக்கி வைத்தவன் கடைசி பலியா?

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. ஒரு கவிதைக்குள் இத்தனை கேள்வியா?....கொலைக்கு பின்னால் ஒலிந்திருக்கும் அரசியல் பார்வை... ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும் ...

    ReplyDelete
  3. Aga...super kavithaikal...lot of meanings .it shows the unlimited problems of the society...behind the murder there are many things...

    ReplyDelete
  4. நம்மை அறியாமலேயே நமது கைரேகைகளும்
    கத்தியில் பதிந்திருப்பது பார்த்துப்
    பதறிப்போகிறோம்

    நா வே அருள்

    ReplyDelete
  5. அடிப்படையில் அறிவுக் கொலை
    அறிவை அபகரித்தவர்கள் நிகழ்த்திய கொலை
    எப்போது நிகழும் எதிர்க்கொலை?

    ReplyDelete