Pages

Thursday, 10 May 2012

பெருமிதம


மீள எத்தணித்து எம்பும்
ஒவ்வொரு அடியும்
இன்னும ஆழப்புதைய..

மீட்பனுக்காக
ஏங்கவும் செய்யலாம்
புதைகுழியின்
தன்மையுணர்ந்து
மாற்றுவழி
தேடவும் செய்யலாம்..

கைபிடி கயிறோ
ஊன்றும் கோலோ
அகப்பட்ட எதுவோ
பயத்தை உதறி
பற்றி மேலேறலாம்

முக்கி முயன்று
மூச்சை அடக்கி
சகதி முழுவதையும்
குவிமையப்படுத்தி
உந்தி ஏறி
சாணேனும் நகரலாம்

வெற்றி கை நழுவலாம்
மரணம் வந்து தழுவலாம்
போராடிய பெருமிதம்
சந்ததியை தலை நிமிர்த்துமே
போர்க்குணமே
தலைமுறைக்கும் வழிநடத்துமே.

5 comments:

  1. போர்குனமிக்க வரிகள்...

    ReplyDelete
  2. நன்றhக இருக்கிறது தோழரே
    சுற்றும் வரை பூமி
    சுடும் வரை நெருப்பு
    போராடும் வரை மனிதன்
    நீ மனிதன்
    என்று வைரமுத்து எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

    வாழ்க உமது விரல்கள்

    ReplyDelete
  3. உட்கிடக்கை உணர்த்தும் உண்மையான உணர்வுகள்...!!! பெருமிதம் நியாயமானது...சொன்ன விதம் அருமையானது....!!கை பிடிக்க- உதவ உங்கள் மணியின் தளிர்க்கரங்கள்.....எங்களை உயர்த்துங்கள்....வழி நடத்துங்கள்...எல்லோரும் ஏறலாம்.......மேலே..... நன்றி---------ஆர்.எஸ்.மணி,திண்டுக்கல்.

    ReplyDelete
  4. Hope...how we get with out any ?
    போராடிய பெருமிதம்
    சந்ததியை தலை நிமிர்த்துமே
    போர்க்குணமே
    தலைமுறைக்கும் வழிநடத்துமே.

    ReplyDelete
  5. உண்மை அப்பா. ஒவ்வொரு பெண்ணும் போர்குணம் நிறைத்தவளே!

    ReplyDelete