Pages

Saturday, 17 March 2012

அகத்தேடல்-10


எதிரிகள்
மார்பில் குத்தினர்
செத்துவிட்டதாக சொன்னார்கள்
செத்தபின்பும் வாழ்ந்தான்

நண்பர்கள்
முதுகில் குத்தினர்
உயிருக்கு ஆபத்தில்லை என்றார்கள்
உள்ளத்தால் நடைபிணமானான்

என்ன ஆனது?
ஏன் அப்படியானான்?
யோசிக்க யோசிக்க
நெஞ்சு ரணமானது

ஒருவேளை
எண்ணித்துணியாத நட்பா?
துணிந்தபின் எண்ணுவது
பிழையா?

இவன் அவனாகவும்
அவன் இவனாகவும்
கூடுவிட்டு கூடுபாய்ந்து
குறுக்கு விசாரணை செய்தநொடியில்
குறுகுறுத்தது
குற்றமுள்ள நெஞ்சு

வினையிண்றி
எதிர்வினை ஏது?
வினைப்பயன் என்பது
இதுதாமோ?
விதைத்ததை அறுக்கிறாய்
பதைப்பது ஏனோ?

நாள்பட்ட ரணத்துக்கு
அறுவை சிகிட்சை
இது உடலுக்குத்தான்
உள்ளத்துக்கு அல்ல

சமாதானங்களை
மூளை சொல்கிறது
நெஞ்சு ஏற்பதில்லை

காயங்களை
ஆற்றும் வல்லமை
காலத்துக்கே உண்டு
காத்திருக்கும் பொறுமை
யாருக்குமே இல்லை

கூடுவிட்டுகூடு பாய்ந்துநின்று
கோணங்களை மாற்றிமாற்றி
நியாயங்களை உரசிப்பார்த்தால்
ரணங்கள் ஆறிப்போகும்
காயங்கள் கரைந்துபோகும்

வினையின்றி
எதிர்வினை ஏது?
உனக்குள் நீயே
யோசித்துப் பாரு......


3 comments:

  1. யதார்த்தமான நடையில், அருமையான கருத்தாழம் கொண்ட கருத்தைனைக் கொண்ட கவிதை! அருமை!

    ReplyDelete
  2. வரிகளின் வர்ணனை அற்புதம்....

    ReplyDelete
  3. காயங்களை
    ஆற்றும் வல்லமை
    காலத்துக்கே உண்டு
    காத்திருக்கும் பொறுமை
    யாருக்குமே இல்லை-EXCELLANT LINES..MORE MEANINGS

    ReplyDelete