Pages

Friday, 13 June 2025

வாழ்க "சாணி"நக்கித்தனம் !

 


யாருக்காக எழுதுவாய் ?
யாருக்காக அழுவாய் ?
பற்றி எரியும் டெல்அவிஸ்ஸுக்காகவா ?
அகமதாபாத் மரண ஓலத்துக்காகவா ?
கலவர நெருப்பில் பொசுங்கும் மணிப்பூருக்காகவா ?
பசியில் துடிக்கும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்காகவா ?
லாபவெறியிலா பூமிப்பந்தையே சூறையாடுவதற்கு எதிராகவா ?
வெறுப்பும் பொய்யும் மட்டுமே
வசுதைவ குடும்பகமாக்குவதற்கு எதிராகவா ?
போடா போ ! புண்ணாக்கு !
இதையெல்லாம் விவாதிக்க நாங்கள் என்ன வெட்டிப் பயலா ?
மாம்பழச் சண்டை
அணில் ஆட்டம்
முருகக் கடவுளை முச்சந்திக்கு இழுத்து பகடை உருட்டும் சகுனி பெருமை
"பயில்வான் ரங்கநாதன்" "இந்து நேசன்" வகைறா சூடான செய்திகள்
எவ்வளவோ இருக்கு !
போடா போ !புண்ணாக்கு!
உன் அன்பையும் மனிதத்தையும்
பகுத்தறிவையும் நேர்மையையும் தூக்கி உடைப்பில் போடு !
வாழ்க "சாணி"நக்கித்தனம் !
சுபொஅ.
14/06/25

No comments:

Post a Comment