Pages

Saturday, 14 December 2024

இரைச்சலின் நடுவே

 



இரைச்சலின் நடுவே

இருக்கப் பழகுகிறோம்

புழுக்கத்தின் நடுவே

உழைக்கப் பழகுகிறோம்

நாற்றத்தின் நடுவே

நடக்கப் பழகுகிறோம்

வெள்ளத்தின் நடுவே

பிழைக்கப் பழகுகிறோம்

வெறுப்பின் நடுவே

வசிக்கப் பழகுகிறோம்

சாக்கடைக் கல்லாய்

கிடக்கப் பழகுகிறோம்

மறந்தும் மனிதராய்

வாழ நினையோம் !

ச்சீ ..ச்சீ ! இழிநிலை !

சீறி எழு ! எரிமலை நீ !

 

சுபொஅ.

 


No comments:

Post a Comment