Pages

Sunday, 6 October 2024

முற்றுப்புள்ளி அல்ல

 


உங்கள் நாவின் சுவை மொட்டுக்கள்

உங்கள் காதின் ரசனை மடல்கள்

உங்கள் கண்ணின் நடன ஈர்ப்புகள்

உங்கள் தேடலின் குவிமையம்

எதுவுமே நேற்று போல் இன்று இல்லை

உங்கள் தாத்தாவுக்கும் உங்களுக்கும்

இருப்பது தலைமுறை இடைவெளி அல்ல

காலத்தின் வளர் சிதை மாற்றம்  - இது

முற்றுப்புள்ளி அல்ல கால்புள்ளி ….

 

சுபொஅ.


No comments:

Post a Comment