இன்னும் மீதமிருக்கிறது
நம்பிக்கை
அந்த நம்பிக்கை
மட்டும் போதாதே!
அதுவும் மெல்லத்
தேய்ந்து வருகிறதே !
மானுடம் இன்னும்
பட்டுப்போகவில்லை
மெய்தான்
பெரும்துயரங்களூடே தலைநீட்டுகிறது
ஆயினும் அதன்
குரலில் பழைய மிடுக்கு இல்லையே !
போராட்டத்தின்
வெப்பம் இன்னும் தணிந்துவிடவில்லை
சாம்பல் பூத்துக்
கிடக்கிறது உண்மைதான்
ஊதி காட்டுத்
தீ ஆக்கும் சக்தி யாருக்கும் இருக்கிறது ?
ஓராயிரம்
வாய்கள் ஒன்றினைந்து ஊதும் பொழுதில்
பனிமூடிய
கங்குகளும் யுகநெருப்பாய் எழுமே !
பாலஸ்தீனம் உயிர்த்தெழுமே ! தோழர்கள் பறை முழங்க!
சுபொஅ.
07/08/2024.
No comments:
Post a Comment