விவாதம் உரையாடல்
அபிப்பிராயம்
எந்த சொல்லும்
பொருந்தவில்லை
அவர்களின்
வெறுப்பு உமிழும் வாய்களுக்கு!
குடிகாரன்
குடிவெறியில் எப்போதேனும்
உண்மையை உளறிவிடக்
கூடும் !
மதவெறியர்
மறந்தும் மனிதம் பேசுவதில்லை !
மதவெறி சாதிவெறி
இனவெறி எங்கும்
மானுடத்தின்
முதல் வைரி !
அன்பின் அரிச்சுவடியும்
அறியாத ஜடங்கள் !
இவர்களோடு
வாழ்வது கொடிதினும் கொடிது
இருப்பினும்
வேறு என்ன வழி ? – தயங்காமல்
அவர் முகமூடியைக்
கிழித் தெறி !
சுபொஅ.
03/08/24.
No comments:
Post a Comment