Pages

Friday, 8 December 2023

அந்த ரகசிய அறையில்

 




அந்த ரகசிய அறையில்

புதைக்கப்பட்டுள்ளவை

என்னவாக இருக்கும் ?

 

தெரியாத வரைதானே

அவை ரகசியம்

 

 

அந்த மர்மப் புதிரை

விடுவிப்பது எப்போது ?

 

விடுவித்தால் அது

எப்படி புதிராக இருக்கும் ?

 

மன அழுக்கை வெளுத்த

சாம்பலும் இல்லை

மனபூட்டை திறக்கும்

சாவியும் இல்லை .

மண்ணுக்கடியில் புதைந்த

சிதையில் எரிந்த

அத்தனை பேரும் சாட்சி !

 

ரகசியங்களத் தோண்ட முனைந்து

இதயம் ரத்தம் கசிய வேண்டாம் !

 

யாரையும் முழுதாய் புரிந்து கொள்ள

யாராலும் முடியாது

புரிந்தவரை போதும்

குறை நிறைகளோடு

புன்னகைத்து வாழப்பழகு !

 

சுபொஅ.

9/12/2023.

 

 


No comments:

Post a Comment