வாழப்பழகு ! புதிதாக சிந்திக்கப் பழகு
! - 1
“ நேற்றையைப் போல் இன்று வாழ்க்கை இல்லை…”
- அநேகம் பேர் இப்படித்தான் புலம்புகிறார்கள் .
“ நேற்று போலவே இன்றும் வாழ்க்கை அப்படியே ஏன் இருக்க
வேண்டும் ?” என்று யாருமே தனக்குள் கேள்வி கேட்பதில்லை .
“ நேற்றின் சுவை நாக்கிலும் வாழ்விலும் ஒட்டிக்கிடக்கிறதே
என்ன செய்ய ?” என அங்கலாய்க்கிறார்கள் .
“ நேற்று சுவாசித்த காற்றையா இன்று சுவாசிக்கிறாய்
? நேற்று குளித்த தண்ணீரிலா இன்று குளிக்கிறாய் ? நேற்று உண்ட உணவையா இன்று உண்கிறாய்
? நேற்று உடுத்த உடையையா இன்று உடுக்கிறாய் ? நேற்று அனுபவித்த வாழ்க்கையையா இன்று
அனுபவிக்கிறாய் ?நுகர்வுச் சந்தையில் பார்க்கும் ஒவ்வொன்றையும் முன்பு நீ யோசித்ததேனும்
உண்டா ?” யதார்த்தம் நெற்றிப் பொட்டில் அறைந்து கேட்கிறது .
“ இழந்ததைப் பற்றி பேசவே கூடாதா ?” என்கிறாய் .
“ இழந்தது அதிகமெனில் பெற்றதும் அதிகமே . எதையும்
இழக்காமல் எதையும் பெற முடியாது . எதை இழக்கிறாய் எதைப் பெறுகிறாய் என்பது மட்டுமே
கேள்வி .” என்கிறது வாழ்க்கை அனுபவம் .
“அந்த அனுபவம்தான் இழந்ததை எண்ணி அரற்றவைக்கிறது..”
என சமாதானம் சொல்கிறாய் .
“ மன இறுக்கத்தை அழுகை குறைக்குமெனில் சற்று அழலாம்
.பிழை இல்லை .ஆயின் அழுகை ஒரு போதும் தீர்வல்ல. பிரச்சனைகளை சரியாக அலசினால் தீர்வு
புலப்படலாம்.” – என ஞானிகள் சொல்லிச் சென்றது மறக்கக்கூடியதல்ல.
“ அப்படியே நேற்றை மீட்டுவிட முடியுமா ?” – இப்படித்தான்
கற்பனையில் உழல்கிறார்கள் .
“கடந்த காலத்துக்குள் மீண்டும் வாழமுடியாது ;கடந்த
காலத்தை போன்றும் வாழ முடியாது . நேற்றின் தொடர்ச்சியாக - நேற்றின் அனுபவத்தோடு இன்று புதிதாக வாழப்பழகு !
“ தொலைத்து
தலைமுழுக வேண்டியவற்றை இன்னும் சுமந்து திரிகிறாய் ; சுமந்து திரிய வேண்டியதை சாக்கடையில்
வீசிவிட்டு பழம் பெருமை பேசுகிறாய் என காலம் உரக்கச் சொல்கிறது.
என்ன ? என்ன
?
பேசுவோம்…
சு.பொ.அகத்தியலிங்கம்.
15/3/2023.
No comments:
Post a Comment