ஓர் ஆன்மீக குரு கூட்டத்தைப் பார்த்து கேட்டார் ,"உங்களில் யார் யார் சொர்க்கத்துக்கு போக விரும்புகிறீர்கள்... கையை உயர்த்துங்கள்."
ஒரு சிறுவனைத் தவிர எல்லோரும் கை உயர்த்தினர்.
ஒரு வேளை அந்த சிறுவனுக்கு கேள்வி விளங்காமல் இருக்கலாம் என எண்ணிய ஆனமீக குரு அவனிடம் கேட்டார் ,"உனக்கு சொர்க்கத்துக்குப் போக விருப்பம் தானே !"
சிறுவன் சொன்னான் ," சொர்க்கமோ நரகமோ சாதி மத சனியன் இல்லாத இடம் எதுவோ அதுவே போதும்..."
ஆன்மீக குரு சமாளிக்க எண்ணினார்." இரண்டு இடத்திலும் சாதி மதம் கிடையாது எனறார்..."
" அப்புறம் என்ன எழவுக்கு பூமியில இந்த சாதி மதங்கள தூக்கிட்டு அழுவுறீங்க... அது இல்லேன்னா பூமியும் சொர்க்கம்தானே..!!"
கூட்டம் அதிர்ந்தது.குரு மவுனம் ஆனார் !
சுபொஅ.
5)3/2023.
No comments:
Post a Comment