Pages

Thursday, 11 June 2020

மூன்று குரங்குகளுக்கும்…





மூன்று குரங்குகளுக்கும்…



காந்தியிடமிருந்து
மூன்று குரங்கு பொம்மைகளை
இரவலாக வாங்கிவந்தேன் .

டோல் கேட்டில் போலிஸார்
பறிமுதல் செய்தனர்
அரசை விமர்சிப்பதாக
என் மீதும் குற்றாச்சாட்டு .

 “எல்லா குரங்கும்
கையில்
ஜால்ரா
வைத்துக் கொள்ளாது ஏன் ?”

நீதிபதி கேள்வியில்
அந்த குரங்களுக்கே
கோபம் வந்து
நீதி தேவதை சிலையை
உடைத்தெறிந்தது .!!!

சுபொஅ.

No comments:

Post a Comment