இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும்
யுகந்தோறும் மாறுதல் என்பது பழங்கனவாச்சு
கணம்தோறும் மாற்றம் என்பதே நிகழ்காலமாச்சு .
ஈடு கொடுக்க எங்கும் எதிலும் பெரும் போராட்டம்
எல்லோருக்கும் எதையோ இழந்த திண்டாட்டம்
லாபவெறி பெரும்பசி நுகர்வுவெறி பெரும்பசி
பதவிவெறி பெரும்பசி பணவெறி பெரும்பசி
வெறிகொண்ட பூதத்தை மேலும் வெறியேற்ற
சாதிவெறி மதவெறி இனவெறி
போதையுச்சம் !
தீயவர் நானென திமிருடன் தெருவினில் ஆட்டம்
ஊரவர் அவர்முன் கிடந்தனர்
நைந்ததுணியாட்டம்
மூளையிடுக்கெலாம் அப்பியது பயம் , மூடத்தனம்
இதயத்தில் ஈரமும் நம்பிக்கையும் மிஞ்சுமோ இனி
மாறுதலின் வேகத்தை எதிர்கொண்டு புதிதாக்கி
மானுடத்தை வாழவைக்க வீயூகத்தை புதிதாக்கி
நொடிதோறும் நொடிதோறும் ஆதிக்க சதியை
பொடியாக்கி புழுதியாக்கி முன்னேறு புதிதாக !!
சு.பொ.அகத்தியலிங்கம்.
28 ஜூலை 2019
28 ஜூலை 2019
No comments:
Post a Comment