Pages
▼
Sunday, 13 January 2019
pபோஓபோ
உழவனின் கோபக் குரல்
உழன்றும் உழவே தலை என்றும்
உலகத்தாற்கு அச்சாணி என்றும்
உழவினார் கைமடங்கின்
சந்நியாசிக்கும் சோறில்லை என்றும்
உழாமல் சோம்பி இருப்பின்
நிலமென்னும் நல்லாள் நகுமென்றும் -இன்னும்
பலவாக தோள்மீது சுமந்து கொண்டாடிய
உழவர் படும்பாடு உரைக்கும் தரமோ இன்று !
உழவர் திருநாளின் வாழ்த்துரைத்தால் போதுமோ
பொங்கும் கண்ணீரை யார் துடைப்பார் ?
பச்சை வயலை எல்லாம் எங்கும்
விஷவாயு களமாக்கி மலடாக்கி தூர்த்துவிட்டு
உழவன் பெருமை உரைப்பதும் வெறும் பேச்சே!
நீர்நிலையைத் தூர்த்துவிட்டு மனைபோட்டு விற்றுவிட்டு
உழவின் தேவையை ஊர் முழுக்க முழங்குவதில் லாபம் என்ன ?
உழவை அழித்துவிட்டு டிஜிட்டல் சிப்ஸ்சை திண்று பசியாறுவையோ ?
போகி நெருப்பில் பொசுக்கிடு உன் மெத்தனத்தை தூக்கத்தை
அகத்தில் நெருப்பேற்றி சூடும் சொரணையும் உள்ளவனாய் மாறிவிடு!
யாரோ ஒரு தலைவர் விடுதலையை தருவார் என நம்பி !
காலில் விழும் கலாச்சாரத்தைப் போகி நெருப்பில் பொசுக்கு
சுயமரியாதை என்பது வெறும் சூத்திரத்தில் அடங்குவதல்ல
அநீதி நடக்குமிடமெல்லாம் ஆர்த்தெழும் போர்க்குணமே!
வெறுங்கையில் முழம்போட்டு வீண்க்னவு காணாமல்
வாழ்க்கையை வென்றெடுக்க வியூகத்தில் சங்கமிப்பீர் !
சு.பொ.அகத்தியலிங்கம் .
No comments:
Post a Comment