Pages
▼
Wednesday, 16 January 2019
சொற்கோலங்கள். 1.
சொற்கோலம். 1
எந்த விழாக் கொண்டாட்டமும் ஏதேனும் கீறலை நெஞ்சில் பொறித்து விடுகிறது.
இது விழாவின் குறைபாடா? கொண்டாடியவர் குறைபாடா?
எந்த விழாவும் இயற்கையோடும் உழைப்போடும் சேர்ந்தே பிறக்கிறது. ஆயினும் அர்த்தம் அற்ற சடங்குகள் அதன் அங்கமாகி விடுவது ஏனோ?
விழாக்களே இல்லா மனித குலம் கற்பனை செய்யவே கனக்கிறது இதயம்.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்க்கு இல்லை என்பது முள்ளாய் உறுத்துகிறது.
ஒரு வட்டாரமோ, இனமோ வர்க்க, வர்ண, சாதி வேறுபாடின்றி விழாக் கொண்டாடல் எக்காலமோ?
கொண்டாட்டங்கள் பண்பாட்டுச் செழுமையின் வாழும் அடையாளங்கள்.
கும்பிடுவதும் வழிபடுவதுமாய் வீழ்ந்த விழாக்கள் பண்பாட்டு வீழ்ச்சியின் பழம் சுமைகள்.
நேற்றின் விழாக்களை அதன் வேரிலிருந்து அடையாளம் காண்பீர்! மீட்டெடுப்பீர்!
நாளைய விழாக்களை அறிவியல் துணையோடும், அனுபவப் பிழிவோடும், வாழ்வின் தேவையோடும் வார்த்தெடுப்பீர் புதிதாய்!
சு.பொ.அகத்தியலிங்கம்.
No comments:
Post a Comment