ஏன் குனியிற…..”
சு.பொ.அகத்தியலிங்கம்.
“அவன் வாயினுள் ஏன் கையை நுழைக்கிறாய் ?”
“வாயை தூய்மைப்படுத்துகிறேன்.”
“ சரி ! அவள் வயிற்றில்
ஏன் மிதிக்கிறாய் ?”
“கெட்ட காற்றை வெளியேற்றுகிறேன்.”
“போகட்டும் ! அவன்
கையை ஏன் முறுக்குகிறாய் ?”
“வலுவேற்றிக்கொண்டிருக்கிறேன்.”
“அதுவும் தொலையட்டும்
..
காலை ஏன் உடைக்கிறாய்
?”
“எலும்பின் வலுவை
சோதிக்கிறேன்.”
“ அய்யையோ ! தடியோடி ஏன் ஓடிவருகிறாய் ?”
“ மண்டையை பிளந்து மூளையை கழற்றி மாட்டத்தான்…”
“ உனக்கு என்னதான்
வேண்டும் ?”
“அப்படிவா வழிக்கு..”
“தெளிவாய் சொல்லு கேட்டுத்தொலைக்கிறேன்.”
“ சரி ..சரி ! முதலில் கேள்வி கேட்பதை நிறுத்து.”
“அப்புறம்..”
“ இந்த பட்டியலில் உள்ளதை மட்டுமே சாப்பிடு !”
“சரி !அடுத்து!”
“ சமஸ்கிருதம் மட்டுமே படி!”
“ம்..ம்..”
“எதைச் சொன்னாலும் நம்பு !கேள்வி கேட்காமல் அடிபணி!”
“ம்.ம். இன்னும் என்னதான் செய்யணும்”
“ நான் சொன்னபடி பேசு ,எழுது ,சிந்தி ,செயல்படு
..”
“ இன்னும் இன்னும்
…ம்.ம்..ம்.ம்”
“மாடுதான் உன் அம்மா ….”
“ஆங் .. இன்னும் இருக்கா…”
….. …… ….. ……
….
…. ….. ….. ….
……
“ஏன் குனியிற …அய்யையையோ ஏன் செருப்ப கழட்டுற….”
#கருத்துரிமை போற்றுதும்
No comments:
Post a Comment