தினம் ஒரு சொல் .26 [ 24/09/2018 ]
புது வீட்டில் ஒழுங்கு படுத்தும் போது எவ்வளவு கறாரான கட்டளைகள்
விதிகள் போடப்பட்டன . மூன்றே மாதங்களில் அவை
என்ன ஆயின ?
தேவை ஒவ்வொன்றிற்கும் ஒரு இடத்தை கொடுத்துவிட்டனவே ! அதுவே இயல்பு
. ஆசை மட்டுமே எதையும் தீர்மானித்துவிட முடியாது ; அவசியத் தேவையே முந்தி நிற்கும்
.
வீடு மாறும் போது எவ்வளவோ கழித்தபின்னும் ஆறே மாதத்தில் எவ்வளவு
குப்பை சேர்ந்துவிட்டது ? ஏன் ?
எது குப்பை என்பதில்கூட ஆளுக்கொரு அளவுகோல் உண்டே ! அதைக் கணக்கில் கொள்ளாமல் எதையும் அவ்வளவு சுலபமாய்
தூக்கி எறியவும் முடியாது .
வீடென்பது அருங்காட்சியகமும் [மியூசியமும்] அல்ல ; குப்பைத்
தொட்டியும் அல்ல . புதியன சேர்வது தவிர்க்க முடியாததுபோல் பழையன கழித்தலும் அவ்வப்போது
நடத்தப்பட்டாக வேண்டும் .
வீட்டிலுள்ள அனைவரும் ஒத்துழைத்த்து மாதந்தோறுமோ மூன்று மாதத்துக்கு
ஒரு முறையோ வேண்டாதவற்றை உரியமுறையில் வெளியேற்றுக
! ஆண்டுக்கொரு போகி போதாது !!!
.
No comments:
Post a Comment