Pages

Monday, 26 February 2018

எமக்கான ஆண்டவர்







எமக்கான ஆண்டவர்


கடவுள் உண்டா ? இல்லையா ?
கேள்வியே எமக்கு ஒரு போதுமில்லை ..

ஏழைக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும்
அவர் இரட்சகராய் இருந்ததே இல்லை

பூமிப்பந்து முழுவதும் தேடிச்சலித்துவிட்டேன்
குழந்தையின் அழுகுரலுக்குக்கூட அவர் செவிமடுத்ததில்லை!

ஆளுவோருக்கும் ஆதிக்கம் செய்வோருக்குமான
ஆண்டவனாகவே எங்கும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்

தீமையை ,போரை ,வறுமையை ,வன்முறையை, சுரண்டலை
எதையும் அவர் தடுத்ததே இல்லை ; ஆசிர்வதிக்கவே செய்கிறார் !

எமக்கான ஆண்டவர் எங்கேயும் எப்போதும்
இருந்ததே இல்லை ! இனி இருக்கப்போவதுமில்லை !


சு.பொ.அகத்தியலிங்கம்

No comments:

Post a Comment