நான்
தேசபக்தனல்ல …
கிரிகெட்
மாட்ச் பார்க்கும்போது
தேசக்கொடியை
உடலெல்லாம்
சுற்றிக்கொள்வதுதான்
தேசபக்தியெனில்
நான்
தேசபக்தனல்ல …
யோகா
செய்யும் போது
தேசக்
கொடியால் மூஞ்சியைத்
துடைப்பதுதான்
தேசபக்தியெனில்
நான்
தேசபக்தனல்ல …
அண்டை
வீட்டில் வசிக்கும்
அக்பரை
அக்னீஸ்மேரியை அந்நியனாய்
வெறுக்கப்
பழகுவதுதான் தேசபக்தியெனில்
நான்
தேசபக்தனல்ல....
அடுத்தவர்
உணவில் உடையில்
மூக்கை
நுழைப்பதுதான் தேசபக்தியெனில்
நூறு முறை
உரக்கச் சொல்வேன்
நான்
தேசபக்தனல்ல....
தேசியகீதம்
பாடிக்கொண்டே
மெல்ல
பிக்பாகெட் அடிப்பதை
கண்டும்காணாமலிருப்பதே
தேசபக்தியெனில்
நான்
தேசபக்தனல்ல....
வளர்ச்சி
வளர்ச்சி என மந்திரம்
முணுமுணுத்தபடி
ஏழை
வயிற்றிலடித்து கார்ப்பரேட்
வளர்க்கும்
குருட்டுத்தனமே
தேசபக்தியெனில்
நான்
தேசபக்தனல்ல....
தேசப்படத்தின்
வரை கோடுகளை
மண்ணை
மலையை கடலை காட்டை பாலையை
நேசிப்பது
மட்டுமே தேசபத்தியெனில்
நான்
தேசபக்தனல்ல....
வியர்வையால்
இரத்தத்தால் தேசத்தை
நிர்மானிக்கும்
பட்டினி வயிறுகளை
பாவப்பட்ட
ஆத்மாக்களை நேசிப்பதும்
அவர்களுக்காய்
சமரசமின்றி சமர் செய்வதும்
தேசவிரோதமெனில்
சந்தேகமே இல்லை
நான்
தேசவிரோதியே ! நான்
தேசவிரோதியே !
-
சு.பொ.அகத்தியலிங்கம்
.
தேசியகீதம் பாடிக்கொண்டே
ReplyDeleteமெல்ல பிக்பாகெட் அடிப்பதை
கண்டும்காணாமலிருப்பதே தேசபக்தியெனில்
நான் தேசபக்தனல்ல....
aarumai
super
தேசியகீதம் பாடிக்கொண்டே
மெல்ல பிக்பாகெட் அடிப்பதை
கண்டும்காணாமலிருப்பதே தேசபக்தியெனில்
நான் தேசபக்தனல்ல....
https://www.youtube.com/edit?o=U&video_id=rXR-uWG9xIc
https://youtu.be/XOhXLoHtRSQ
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=rFNnfG-6sj
ReplyDeleteSUPER POST
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=CBZJihRgLJk
excellent post
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=DHjNC-t4iZs
excellent post
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw
நன்றி!! நானும் தேசபக்தனல்ல...
ReplyDelete