Pages

Tuesday, 12 January 2016

யுகக் கர்ப்பம்











யுகக் கர்ப்பம்

சில நேரங்களில்
நம்பிக்கையின் உச்சத்தில்…

பல நேரங்களில்
நம்பிக்கை வறட்சியில்….

நாளும் காணும் நிகழ்வுகளின்
தொடர்வினையாய்
நம்பிக்கையும் மாறி மாறி …

நான் கனவு காணும்
சமத்துவயுகம்  பகற்கனவல்ல
அறிவியல் நெருப்பில்
புடம்போட்ட சமூகக்கணக்கு….

இன்றோ நாளையோ
என் மூச்சடங்கும் முன்போ
கைக்கூடுமென எதிர்பார்க்கவில்லை …

நானறிவேன்
இது ரிஷி கர்ப்பமல்ல
இராத்தங்காமல் பிரசவிக்க …..

இதுஇராட்ஷச கர்ப்பம்
அதுவும்
புதுயுகத்துக்கான
யுகக் கர்ப்பம் .

கருத்தரித்துவிட்டது
பிறப்பது நிச்சயம்
கருக்கலைப்புகளையும் மீறி……

ஆயின்
அது சுகப்பிரசவமாக இருக்காது
என்பது மட்டும்
சர்வ நிச்சயம் .

- சு.பொ.அகத்தியலிங்கம்.




1 comment:

  1. நீங்களும் ஆன்லைன் முலம் வருமானம் பார்க்க ஆசை உள்ளவரா கவலைய விடுங்கள் இலவசமா பயிற்ச்சி எடுங்கள் உங்களுடைய ஆசையை நிறைவு செய்து கொள்ளுங்கள் இன்றே கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்

    ஆன்லைன் வேலை இலவச பயிற்ச்சிகள்

    ReplyDelete