Pages

Saturday, 22 November 2014

நரியும் பரியும்..





நரியும் பரியும் ...


நரி பரியாச்சு
நேற்றின் பொய்யெனினும்
இன்றும் நம்புகிறோம்…
பரி மீண்டும் நரியான
செய்தியை மறந்து
பரிபோல் வேடமிட்ட
நரியிடம்
நாட்டாமை தந்து விட்டு
நடையழகை குரலழகை
மெய்மறந்து போற்றுகிறோம்
நயவஞ்சகத்தை
மதிநுட்பமென
மயங்கி கொண்டாடுகிறோம்
நாக்கை தொங்க வைக்கும்
குருதிச் சுவையை
எத்தனை நாள் தான்
அடக்கும் ?
வேடத்தை மீறி
நாக்கு நீள குருதி குடிக்கையில்
உணர்வோமா
பரியல்ல நரி என்று !

No comments:

Post a Comment