Pages

Sunday, 17 February 2013

அகத்தேடல் -12


அகத்தேடல் -12

அகத்தேடல் தொடங்கி
முடித்தவரில்லை
அகத்தி !
நீயும் விதிவிலக்கில்லை..
நண்பர் சொவதில் நியாயமுண்டு
மீண்டும் தொடங்கினேன்
விட்ட இடத்தில்..

முகவரி என்றும்
நிரந்தரமில்லை...
அடையாளச் சிக்கலின்
ஆணிவேர் எதுவோ?

பிறந்த வர்க்கம்
எதுவெனக் கேட்டீர்!
இப்போது உழலும் வர்க்கம்
இதுவெனச் சொன்னேன்..
வர்க்க குணத்தை
எங்கனம் கணிப்பீர்?

ஏறிய ஏணியை
எட்டி உதைப்பதும்
வந்த இடத்தை
வசதியாய் மறப்பதும்
சொந்தநலனும் சொகுசும் தேடி
பழசை மறந்து பாதை மாறலும்
ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து
வெந்த நெஞ்சில் வெடித்த கேள்வியே
வர்க்க குணத்தை
எங்கனம் அளப்பீர்?

No comments:

Post a Comment