Pages

Tuesday, 17 April 2012

அகத்தேடல்-11


வெ
ங்காயத்தை
உரித்து உரித்து
இருப்பைத் தேடுகிறேன்..

அடையாளத்தை
உதிர்த்து உதிர்த்து
சுயத்தைத் தேடுகிறேன்..

ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு குணமுண்டு
மறந்தே போகின்றேன்..

ஒவ்வொரு நிலையிலும்
அதனதன் தேவைகள்
நன்றே உணர்கின்றேன்..

அளவுகள் மாறமாற
குணமும் மாறும்
அற்புதம் அறிகின்றேன்..

நிலையை மறுப்பதும்
பின் அதனை மறுப்பதும்
வாடிக்கை என்கின்றேன்..

முரண்பட்டு மோதலும்
உடன்பட்டு வாழலும்
வாழ்க்கை நியதி என்கின்றேன்..

மாறாதது ஏதுமில்லை
மாறிக்கொண்டே இருக்கின்றேன்
மாற்றங்களூடே வாழ்கின்றேன்..

-சு.பொ.அகத்திய்லிங்கம்.

2 comments:

  1. வாழ்கையின் எதார்த்தத்தை மார்க்ஸ்சிய உள்லொளியோடு சேர்த்து சொல்லும் கவிதை...பிரமாதம்...

    ReplyDelete
  2. //மாறாதது ஏதுமில்லை
    மாறிக்கொண்டே இருக்கின்றேன்
    மாற்றங்களூடே வாழ்கின்றேன்..
    //
    arumai...vaalththukkal

    ReplyDelete