Pages

Saturday, 8 October 2011

அகத்தேடல்-1


நீ
இல்லாதுபோனால்

அந்த இடம்

சூன்யமாகிவிடாது..



வேறோன்று

நிரப்பிவிடும்.



காலச்சூறாவளியில்

உன் தடயமும்

காணாமல் போய்விடும்.



நேற்றின் சுவடுகளைத்

தடவிப் பார்க்கலாம்

தழுவமுடியாது



நாளைக் கனவுகளில்

மிதந்து திரியலாம்

கரைந்து போக இயலாது



இன்றின்

யதார்த்த்ச் சூட்டில்

பாதம் கொப்பளிக்க

நடந்தாக வேண்டும்



பொய்கலவாத

உண்மையோ

மெய்கலவாத

பொய்யோ

எங்ஙணும் இல்லை



செம்புகலவாமல்

தங்கம்

நகையாவதில்லை

மேனிக்கு

எழிற்சேர்ப்பதில்லை



உன்

வாழ்வின் எச்சங்களை

வரலாறு பதிந்துகொள்ளட்டும்



நொடிகளில்

மரணம்

கதவைத் தட்டலாம்



நொடிகளுக்கிடையேயும்

வாழ்க்கையுண்டு



நீ

வாழும்போது

பிறர் புன்னகைக்கட்டும்



உன்

மரணத்தின்போது

அண்டைவீட்டாரின்

ஒரு துளி கண்ணீர்

அடையாளம் காட்டட்டும்



நீ

இல்லாதுபோனால்

அந்த இடம்

சூன்யமாகிவிடாது..





-சு.பொ.அகத்தியலிங்கம்

No comments:

Post a Comment